Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பொதுத் தேர்தல் திகதியில் மாற்றம்…!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக அரச செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாள் குறித்து சில சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து...

யாழில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு…!

யாழ்ப்பாணத்தில் நபரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு நீண்ட வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கியிருந்தது. அதன்பின்னர் இவருக்கு இடையியைடே வாந்தி ஏற்படுவது வழமை. கடந்த 25ஆம் திகதியும் காலை 10 மணிக்கு இவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது....

10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் தொகையுடன் ஒருவர் கைது…!

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கென்தலியத்தபாலுவ பிரதேசத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர்  (திமிங்கலத்தின் வாந்தி) தொகையுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (25.10.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில்...

தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை..!

தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றை இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா படைத்துள்ளார். நிமேஷா கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த சோசலிசக் கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம்….!

பமுனுகம பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களைப் பலமாகத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இரு இளைஞர்கள் திருட்டு சம்பவம் ஒன்று...

விபத்துக்குள்ளான லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனம்…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று (25.10.2024) விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் பிரதேசவாசிகளுக்கும், டிபெண்டர் வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாகனத்தில் பல்வேறு...

அரசாங்க அதிபர் கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலையினை நேரில் ஆராய்வு..!

கேரதீவு சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலைகளை இன்றைய தினம் (26.10.2024) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி, புனரமைப்பு வேலைகளின் முன்னேற்றத்தினை கேட்டறிந்து கொண்டார். குறித்த பாலமானது ஆபத்தான நிலையில் காணப்பட்ட நிலையில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை...

அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு…!

அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் அவிசாவளை நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

மஹரகம, பழைய வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கார் மீட்பு…!

மஹரகம, பழைய வீதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு முன்பாக கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்த காரில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த கார் பல இடங்களில் விபத்துக்குள்ளாகியிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம வர்த்தக சங்க உறுப்பினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இந்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்...

ரயில் ஊழியர்களுக்கு இலவச ரயில் பயண அனுமதி…!

அனைத்து ரயில் ஊழியர்களுக்கும் தாம் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் பயண அனுமதி வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஊழியர்கள் தொடர்ந்து பொதுமக்களால் விமர்சிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சகம், இந்நிலையை...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...