Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது….!

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21.09) வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காமல், வாக்குச்சீட்டினை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார்...

முற்பகல் 11.00 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம்…!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21.09) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் முற்பகல் 11.00 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம் கீழே, கொழும்பு 35%, கம்பஹா 35%, இரத்தினபுரி 30%, களுத்துறை 33%, மாத்தறை 35%,...

கொழும்பு பங்குச் சந்தை அதிகரிப்பு..!

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த விலைக் குறியீடு நேற்று (20) 89.73 அலகுகளாக அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையில் மொத்த விலைக் குறியீடு நேற்று முன்தினம் (19) பதிவான 10884.57 அலகுகளிலிருந்து நேற்று (20) 10974.30 வரையில் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஆர பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 25 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் செயற்பாடுகள்  வன்மையாக கண்டிக்கத்தக்கவை; பஃவ்ரல்…!

ஒரு சில ஜனாதிபதி வேட்பாளர்களின் செயற்பாடுகள்  வன்மையாக கண்டிக்கத்தக்கவையென தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான பஃவ்ரல் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தேர்தல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டும் என்பதை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வலியுறுத்துகிறோம் என்றும் பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 5 மணித்தியாலங்களில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு!

வாக்குப்பதிவு ஆரம்பமாகி 5 மணி நேரம் கடந்தும் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. கடந்த 5 மணித்தியாலங்களில் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த ஆண்டு தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெறும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல்...

வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்தவர் கைது…!

மிட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்வத்தை பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த நபரொருவர் இன்று (21.09) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவை, தெல்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர்  தெல்வத்தை பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று தனது...

அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்…!

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறைகள் ஏற்படின் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ”ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த...

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்..!

இன்று காலை 11 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. கொழும்பு 35%, கம்பஹா 35%, நுவரெலியா 45%, மாத்தறை 35%, குருநாகல் 35%, அனுராதபுரம் 30%, காலி 22%, கேகாலை 35.8%, பதுளை 33.3%, அம்பாந்தோட்டை 25%, கண்டி 22% மட்டக்களப்பு 27%, மாத்தளை 30%, இரத்தினபுரி 30%, களுத்துறை 33%,...

யாழில் தீ விபத்து; பெண் பலி…!

யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 65 வயது பெண் உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளது. அத்தோடு, அவ்வீட்டின் வாசலில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம்...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக...