Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்காக 15,000இற்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 15,000இற்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவிடம் தற்போது சுமார் 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டின் நீளத்திலேயே இந்த ஆண்டுக்கான வாக்குச் சீட்டு குறியிடும் தாள் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பிலானா முறைப்பாடுகள்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலானா முறைப்பாடுகள் 1,482 அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (30.08) வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,419 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதி மீறல்களுடன் தொடர்புடையதெனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மேலும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 07...

கோடாவுடன் ஒருவர் கைது…!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்க உட்பட்ட தியகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை வடக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1,080 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. தியகம, கல்பாத பிரதேசத்தில் வசிக்கும் 68...

காலி – மாபலகம வீதியில் விபத்து; ஒருவர் படுகாயம்…!

காலி - மாபலகம வீதியில் கும்புக்கஹ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டாார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் அதிக குடிபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்...

மகாவலி கங்கையில் ஆணொருவரின் சடலம் மீட்பு…!

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில்,...

போதைப்பொருளுடன்  மலேசிய பெண் ஒருவர் கைது…!

பெல்லன்வில பகுதியில் 3 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன்  மலேசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய குறித்த பெண் போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில்  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொக்கெய்ன்  போதைப் பொருள்  சிறிய மாத்திரை குளுசைகளில்  நிரப்பப்பட்டு இனிப்பு பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த...

பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…!

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு வியாழக்கிழமை (29.08) இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் மூளாய்...

மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு…!

மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சயந்தன் கேதீசா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்துள்ளார். இருப்பினும் வியாபாரம்...

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து; ஒருவர் பலி…!

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (30.08) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் பூவரசன்குளம், குருக்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின்...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...