Wednesday, June 24, 2026
No menu items!

மலையக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் நியமனம்

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனக் கடித்தத்தில் மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர் பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர்  நலத்திட்டங்கள்,தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை   சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட  ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கொவிட்  தொற்றாளர்கள் அதிகரிப்பு !

கனடாவின் ஒட்டாவாவில் கொவிட் நோயார்களின் அனுமதிகள் அதிகரித்துள்ளதாக கொவிட் நோயாளர்களுக்கான வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய்த் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் இதனால் அவர்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளிற்கு இடையில் நடைபெற்று வரும் ஒரு நாள் சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் (6) சேர் விவியன் ரிச்சர்ட்சன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 6...

மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு..!

கடந்த 10 மாதங்களில் 544,488 மின் துண்டிப்புக்களும் மின் இணைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை 50 இலட்சம் மின் பாவணையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை வழங்குவதாக வெளியாகும்...

இன்றும் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல மாகாணங்களில் பி.ப . 1.00 மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின்...

சீனாவிற்கு செல்வதை தவிர்க்கவும்

சீனாவில் சுவாசத்தொகுதியுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதன் காரணமாக ஹொங்கொங், மக்காவ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென தாய்வான் சுகாதார அமைச்சு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், முதியவர்கள்,...

இரண்டாவது டெஸ்டில் மோதும் பங்களாதேஷ், நியூசிலாந்து

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள ரஷ்ய ஜனாதிபதி

உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மீது  போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால்  கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வெளிநாட்டு பயணங்களை...

பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்டமையால் கடந்த திங்கட்கிழமை (04) கைது செய்யப்பட்டார். கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும்...

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Urbanrisers அணி

நடைபெற்றுவரும் 2023/2024 இற்கான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று (05) சூரத்தில் நடைபெற்ற...