Friday, July 10, 2026
No menu items!

Updates

இயன் மருத்துவர் கொலை; நால்வருக்கு விளக்கமறியல்

தெல்தெனியவில் காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இயன் மருத்துவரின் சடலம் தொடர்பாக, பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின்...

வெனிசுலாவை உலுக்கிய “இரட்டை பூகம்பம்”; 235 பேர் உயிரிழப்பு, 4300 பேர் காயம்

வடக்கு வெனிசுலாவை புதன்கிழமை (24) மாலை ஏற்பட்ட"இரட்டை பூகம்பம்" எனப்படும் நில அதிர்வுகளால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநேரம் இந்த பாதிப்பினால் 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணி தொடரும் நிலையில் உயிரிழப்புக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் USGS எச்சரித்துள்ளது. வெனிசுலாவில் 39 வினாடியில் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டிருந்ததாக...

இயன் மருத்துவர் கொலை; பொலிஸ் அதிகாரியின் கைதை அடுத்து விசாரணை தீவிரம்

தெல்தெனியவில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் இயன் மருத்துவரின் மரணம் தொடர்பாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, யாழ்ப்பாணத்தில், ​​43 வயதான பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தையுடன் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த 49 வயதான சாரதி ஒருவரும் கைது...

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்;மத்திய வங்கி அறிக்கை

அரச கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கையை பொது நிதிக் குழு (COPF) ஆய்வு செய்துள்ளது. இந்த விடயம், நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் கடந்த ஜூன் 23 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது...

வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதனூடாக 16 இலட்சம் பேர் நன்மைகளை பெற்றனர். எனினும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் அதன் நான்காவது பிரிவை சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கு...

கைதை தடுக்குமாறு கோரி கோட்டாபய முன்வைத்த மனு தொடர்பில் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் குறித்த மனு இன்று புதன்கிழமை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. குறித்த மனுவில் உள்ள முக்கியமான கோரிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள்...

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள்; எண்ணெய் விலைகளில் சரிவு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ஊடாக எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விலக்குகள் பெற்றதாக தெஹ்ரான் அறிவித்ததைத் தொடர்ந்து, மககெண்ணை விலைகள் சரிந்தன. இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் 2.09% சரிந்து ஒரு பீப்பாய் $78.89 ஆகக் குறைந்தது. WTI ரக எண்ணெய் 60 சென்ட்கள் குறைந்து ஒரு பீப்பாய் 76 டொலர்களாக குறைந்துள்ளது....

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அரசாங்கம் விளக்கம்

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பது ஒகஸ்ட் அல்லது செப்டம்பருக்கு பின்னரே சாத்தியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதனை கூறியுள்ளனர். 'இலங்கை எரிபொருளை மாதாந்த டெண்டர் மூலம் முன்கூட்டியே கொள்வனவு செய்கிறது....

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது: ஈரான் அதிரடி அறிவிப்பு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி, இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து மூடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் கூட்டு இராணுவ கட்டளையான கடம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் இதனை அறிவித்துள்ளது. ஈரானின் மெஹ்ர் அரச செய்தி நிறுவனம் இன்று சனிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த மீறல்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட...

இஸ்ரேலியப் பிரதமர் ஒப்பந்தத்தை சீர்குலைக்கலாம்; ட்ரம்புக்கு உளவுத்துறை எச்சரிக்கை

ஈரானுடன் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அமெரிக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகள் இவ்வாறு ட்ரம்ப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளதாக 'தி வொஷிங்டன் போஸ்ட்' இதழ் செய்தி தெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற குழுவான ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே...
- Advertisement -

Latest News

சிறைச்சாலை கலவரம்;நீதியமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட...