Friday, July 10, 2026
No menu items!

Updates

 கோட்டாபயவின் மனு மீதான விசாரணை ஜூன் 24க்கு ஒத்திவைப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. குறித்த மனு மீதான விசாரணை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய, நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய...

யோசித ராஜபக்ஷ கைது: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விளக்கம்

முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி யோசித கனிஷ்க ராஜபக்ஷவின் கைது தொடர்பான காரணங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விளக்கியுள்ளது. இன்று (17) வெளியிடப்பட்ட ஊடக  அறிக்கையில் ஆணைக்குழு  அவற்றை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில்,கடற்படை கேடட்டாக இருந்த ராஜபக்ஷ, 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிர்வாக பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட...

எண்ணெய் விற்பனை செய்யும் ஈரான்; சடுதியாக குறைந்த பிரென்ட் எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு பிராந்திய மோதலை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்திற்கு அமைய, ஈரான் உடனடியாக மசக்கெண்ணை விற்க அமெரிக்கா அனுமதிக்கும் என்ற செய்தியை அடுத்து எண்ணெய் விலை கடந்த மூன்று மாதத்துக்கு முன்பிருந்த குறைந்தபட்சத்தை எட்டியுள்ளது. இதற்கமைய,ப்ரென்ட்  வகை மசகு எண்ணெய் 5% சரிந்து $78.96, மார்ச் மாதத்துக்கு பின்னர் முதல் முறை 80 டொலர்களுக்கு...

ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை;வெளியான அரசாங்கத்தின் நிலைபாடு

அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின் சூழ்நிலையை பொறுத்து புதிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த திட்டம் 3 மாதங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட காலத்தில் சர்வதேச...

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்ஸில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, “ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்தானது” என ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதார தடைகளை தளர்த்துதல் தொடர்பான விரிவான...

ஈரான் – அமெரிக்கா மோதலை முடிவுக்கு கொண்டு வர தீர்மானம்

வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன. அண்மைய நாட்களில் இரு நாடுகளும் மோதல் ஊடாக தமது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான மிகச்சிறந்த இடமாக ஜெனீவா நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த செய்தியில்...

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது. ஓமான் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் தொடங்கியதாகவும் மேலும் இது ஒரு தற்காப்புத் தாக்குதல் என்றும் அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தத்...

சரண குணவர்தனவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகள் தொடர்பில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல், இந்த வழக்குகளுக்காக மொத்தம் ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதித்துள்ளார். 2006-ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொட்டரி சபையின்...

எச்சரிக்கையை விடுத்து தாக்குதல்களை நிறுத்தியுள்ள ஈரான்!

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தாம் நிறுத்தியுள்ளதாகவும், எவ்வாராயினும் லெபனானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ள ஈரான், தெற்கு லெபனான் உட்பட, இஸ்ரேல் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்தால், மீண்டும் மோதல் தொடங்கும் என எச்சரித்துள்ளது. "லெபனானின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, ஈரான்...

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான வாகனங்கள் விற்கப்படாமல் காணப்படுகிற போதும், எதிர்பார்த்த அளவு வாகன இறக்குமதிகள் குறையவில்லை என்றும், அரச வருவாயில் எந்தவொரு நிதி தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். சுங்கத்துறையின் வருமானத்தில் வாகன...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...