Friday, July 10, 2026
No menu items!

Updates

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(30) நள்ளிரவு முதல் சகல எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் லங்கா வொயிட் டீசலின் விலை ரூ. 15 அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 407 ஆக உள்ளது. ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலையை 20 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் புதிய...

எரிபொருள் விலை குறைக்கப்படுமா?; பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கருத்து

எரிபொருள் விலை திருத்தத்தின் போது நாட்டில் எரிபொருள் விலையில் குறைப்பை எதிர்பார்க்க இயலாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில், உலகளாவிய எண்ணெய் விலை மார்ச்/ஏப்ரல் மாதத்தை விட சற்று குறைவாக காணப்படுகின்ற போதும் சமீபத்திய மத்திய கிழக்கு மோதலுக்கு முன்னர் காணப்பட்ட விலையை...

இலங்கை ரூபாவின் மதிப்பில் சரிவு

இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிராக சரிந்துள்ளது. இலங்கையின் வர்த்தக வங்கிகள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் விகிதங்கள் இரண்டையும் அதிகரித்த நிலையில் நேற்று, செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இவ்வாறு ரூபாவின் மதிப்பு சரிந்துள்ளது. இதற்கமைய செலான் வங்கியில், டொலர் கொள்வனவு விகிதம் ரூ. 321.75 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 335.50 ஆகவும்...

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!; ஈரான்

ஈரானிய வான்வெளியில் பிரவேசித்ததாக கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் எனும் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் ஒரு "ஆளில்லா விமானம்" என அடையாளம் காணப்பட்டு, ஈரானிய எல்லைக்குள் நுழைந்த பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC கூறியதுடன், அமெரிக்காவால் மேலும்...

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா வரையில் குறைத்துள்ளன. தேசிய சேமிப்பு வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 325.50-லிருந்து ரூ. 321.5 ஆகவும், ரூ. 334.50-லிருந்து 330.5 ரூபாவாகவும்...

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான விநியோகஸ்தர்கள் இன்மையால், இலங்கையில் சுமார் 10 மாதங்களாக அதிகாரப்பூர்வ வாகனப் பதிவுத் தகடு தயாரிப்பு தாமதமாகியுள்ளன. இதன் காரணமாக சுமார் 400,000 பதிவு தகடுகள் தயாரிக்கும் செயற்பாடு தாமதமாகியுள்ளன....

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நிறுவனம் ரொமானியா நாட்டில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்து சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பாக...

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரனியகல, ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய இடங்களுக்கும், அத்துடன் இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள எஹெலியகொட, குறுவிட்ட, அயகம மற்றும் இரத்தினபுர ஆகிய இடங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகள்...

ரூபாவின் நடுநிலை மதிப்பு 330 ஆக உள்ளது!; பிரதி நிதியமைச்சர்

இலங்கையின் வங்கிகளுக்கு மத்தியிலான அந்நியச் செலாவணி சந்தையில்,நேற்றைய நிலவரப்படி 350 ஆக இருந்த ரூபாவின் நடுநிலை மதிப்பு, இன்று 330 ரூபாவாகக் குறைந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார். தற்போது ஏல விலை 327 ரூபாவாகவும், எதிர்பார்க்கப்படும் விற்பனை விலை சுமார் 332 ரூபாவாகவும் உள்ளதாகக் கூறிய அவர், இந்த...

சற்றே வலுப்பெற்ற இலங்கை ரூபா

கடந்த சில நாட்களாக கணிசமாக மதிப்பிழந்திருந்த இலங்கை ரூபாய், இன்று (22) இலங்கையில் சகல வர்த்தக வங்கிகளிலும் அமெரிக்க டொலருக்கு நிகராக சற்று வலுப்பெற்றுள்ளன . எனினும், விற்பனை விகிதம் ரூ. 350-க்கு மேல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 342.75 மற்றும் ரூ....
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...