Friday, June 26, 2026
No menu items!

கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 5.26 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை ஏற்றிச்...

ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் வர்த்தகர் கைது…!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (09.10) கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்று அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான...

வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் கைது!

சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் பயணப்பையில் மறைத்து, கொண்டுவரப்பட்ட 36,800 சிகரெட்டுக்களை விமான நிலைய...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சாவுடன் பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானிய பிரஜை என இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் பயணப் பொதியில் மறைத்து...

வெளிநாடு செல்ல அனுமதிமறுக்கப்பட்ட டான் பிரியசாத்..!

டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்த டான் பிரியசாத் நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார். வெளிநாடு செல்ல அவருக்கு எதிராக  நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு...

விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இருந்த விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை 03.45 மணியளவில் கட்டுநாயக்க...

தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் கைது…!

காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (07.09) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் 3 தங்க பிஸ்கட் துண்டுகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் சென்னையிலிருந்து...

விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சிக்கிய கடத்தல்காரர்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய லொறியொன்றில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று (05.09) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு-13 பிரதேசத்தில் வசிக்கும் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக...

ஷிரான் பாஷிக்கின் மகன் கைது..!

பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (27.08) இரவு டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட வர்த்தகர்..!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  22 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (22.08) கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நேற்று (22.08) பிற்பகல் 4 மணியளவில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img