Thursday, April 30, 2026
No menu items!

மருத்துவமனை

கள்ளச்சாராயம் குடித்து குவைத்தில் 40 இந்தியர்கள் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு!

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அல் ஷுயூக் எனும் பகுதியில் விற்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தை வாங்கி பலர் குடித்துள்ளனர். இதனால், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் எனவும், இதுவரையில் சிகிச்சை பலனின்றி இந்தியர்கள் உள்பட 10 வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவலறிந்த...

ஹோமாகமவில் துப்பாக்கிச் சூடு; பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு!

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மீகொட – ஆட்டிகல வீதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, சிற்றூந்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறக்கோட்டையில் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்!

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 145 ஆம் இலக்க பேருந்து மார்க்கத்தில் தனியார் பேருந்து ஒன்று பழைய மீன் சந்தை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தைக் மோதியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் கருத்தின்படி, பேருந்து ஓட்டுநர் நித்திரை கலக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர், பேருந்து நிறுத்தத்தில்...

மின்னேரியாவில் பேருந்து – பார்வூர்தி நேருக்கு நேர் மோதல்: 27 பேர் காயம்!

மின்னேரியாவில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்தும் பார்வூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தி விபத்து; மூவர் மருத்துவமனையில்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தினைத் தொடர்ந்து குறித்த பாரவூர்தி தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொரளை துப்பாக்கிச்சூட்டு ; மேலும் ஒருவர் உயிரிழப்பு!

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்களில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தமை...

இலங்கையில் 1,139 சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் 1,139 சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சிறப்பு மருத்துவர்களின் சேவைகள் கிடைக்க வேண்டிய 134 இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் சிறப்பு பராமரிப்பு மருத்துவமனைகளில் 2042 சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீரவின் கேள்விக்குப்...

இலங்கையில் 2000 ஆரம்ப சுகாதார மையங்கள்: சுகாதார சேவையில் பெரும் மாற்றத்துக்கு அரசு திட்டம்!

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 2000 புதிய ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மையமும்  10,000 பேர் அடிப்படையாகக் கொண்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று முந்தினம்(26.07) இலங்கை அறக்கட்டளை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பட்டறையில் இந்தத் திட்டம்...

மருந்து விநியோகத்தை முறைப்படுத்த ஜனாதிபதி வலியுறுத்தல் – பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம் !

நாட்டில் மருந்து பற்றாக்குறையும் விநியோக தாமதங்களும் இல்லாமல் மக்களுக்கு தொடர்ச்சியான மருந்து வழங்கல் உறுதி செய்ய, மருந்து கொள்முதல் மற்றும் விநியோக பொறிமுறைகளை சீரமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஜனாதிபதி தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி,...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்து; பலர் காயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img