Friday, November 20, 2026
No menu items!

அநுரகுமார திசாநாயக்க

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி..!

2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ”2028ஆம் ஆண்டுமுதல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும் கருத்தொன்றை சமூகத்தில் பரப்பி வருகின்றனர். சில பொய்யான தகவல்க ளை...

ஜனாதிபதி அநுர மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு..!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த கலந்துரையாடல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல்.  எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்கவிற்கு கையளித்தார்.  

அமைச்சர்களின் விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப சரத்தின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை அதில் அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 24 அமைச்சுப் பதவிகளுக்கான விடயதானங்கள்,...

நடைபெறவுள்ள அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று!

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதேவேளை பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மருதானையில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி வலுவான பாராளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய பாராளுமன்ற...

வேட்பாளராக அநுர மேடையில் கூறியவைகளை நடத்திக் காட்டுவதில் தோல்வி கண்டுள்ளார்; சஜித் பிரேமதாச…

வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க மேடையில் கூறியவைகளை நடத்திக் காட்டுவதில் தோல்வி கண்டுள்ளார் என்பதை அவரே நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். துறைமுகத்திலிருந்து ஒரு விலைக்கு எரிபொருள் இறக்கப்பட்டு, மற்றொரு விலைக்கு மக்களுக்கு விற்கப்படுகிறது. அதிக வரி, ஊழல், மோசடி,...

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு…

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று செவ்வாய்கிழமை (05.11.2024) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு  தெரிவித்தார். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம்...

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்த திட்டம்; ஜனாதிபதி!

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதுள்ள சட்டம் மற்றும் வழிகாட்டுதல்களின்படி கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் உள்ள சிக்கல்களை அதிகாரிகள் ஜனாதிபதியிடம்...

மியன்மார் தூதுவரை சந்தித்த  ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மியன்மாரில் மனித கடத்தல்காரர்களால்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img