Monday, September 28, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதி

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு..!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் நடமாடிய நபரொருவர் மீது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப்பைத் தாக்கத் திட்டமிட்டுக் குறித்த நபர் அங்குச் சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு...

கனடா மற்றும் மெக்சிகோ மீதான 25% வரி விதிப்பை ஒத்திவைக்க அமெரிக்கா தீர்மானம்!

கனடா மற்றும் மெக்சிகோ மீதான 25% வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் விதமாக, கனடா அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரிகளை விதித்திருந்தது. தற்போது அதை மாற்றும் எண்ணம் இல்லை...

உக்ரைனுக்கு வழங்கும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை!

உக்ரைனுக்கு வழங்கும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நடந்த வார்த்தைப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்து அமைதியை நிலைநாட்ட பாடுபட வேண்டும்...

யுக்ரைனுக்கு ஆதரவு வழங்க உறுதி கூறிய பிரித்தானியா !

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யுக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகப் பிரித்தானிய பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யுக்ரைனுக்கான இராணுவ உதவிகளை வழங்கும் 2.6 பில்லியன் பவுண்ட்ஸ் கடன் உடன்படிக்கையில் இருவரும் கைச்சாத்திட்டுள்ளனர். ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கியமையின் ஊடாக கிடைக்கப் பெற்ற நிதியிலிருந்து பிரித்தானியா...

உக்ரைன் அதிபரை பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கியைப் பாராட்டியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவர் மிகவும் துணிச்சலான நபர் என்றும்...

எலான் மஸ்கின் கால்களை முத்தமிட்ட அமெரிக்க ஜனாதிபதி!

உலக கோடீஸ்வர வர்த்தகர் எலான் மஸ்கின் கால்களை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முத்தமிடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரச அலுவலகத்தில் இந்த காணொளி வெளியாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்க ஜனாதிபதிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்!

போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, யுக்ரேனில் சமாதான ஒப்பந்தங்கள் பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அது யுக்ரேனை சரணடைய வைக்கும் செயற்பாடாக இருக்கக்கூடாது என இம்மானுவேல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் இருநாட்டு ஜனாதிபதிகளும் தங்கள் சந்திப்பைத் தொடர்ந்து...

ரஷ்ய – அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சந்திப்பு..!

ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சந்திப்பை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் சேர்ஜி ரியாப்கோவை (Sergel Ryabkov) மேற்கோள் காட்டி அந்த நாட்டின் அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக யுக்ரைனில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் ரஷ்யா மற்றும் அமெரிக்க...

ஜெலன்ஸ்கிக்கும் ட்ரம்பின் விசேட தூதுவருக்கும் இடையே சந்திப்பு..!

யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் ஜெலன்ஸ்கீக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, யுக்ரேன் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நம்பகரமான மற்றும் தெளிவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அவசியம் குறித்து விவாதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்...

அமெரிக்கப் புலனாய்வு பிரிவில் இந்தியர் ஒருவருக்கு பதவி!

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI பணிப்பாளராக காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு திகழ்கிறது. இந்த அமைப்பு பல நாடுகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. தற்போது இதன் பணிப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை உத்தியோகப்பூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி நியமித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img