Sunday, July 26, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதி

யுக்ரைன் ஜனாதிபதியை விமர்சித்த ட்ரம்ப் – எழுந்த சர்ச்சை..!

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ் 'ஒரு சர்வாதிகாரி' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பிளவை ஆழப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சவுதி அரேபியாவில் இடம்பெற்ற அமெரிக்க - ரஷ்ய பேச்சுவார்த்தைகளில் தமது தரப்பு புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்ட யுக்ரைன் ஜனாதிபதி, 'ரஷ்யாவின் தவறான தகவல்களுடன் அமெரிக்க...

இந்தியாவிற்கு நவீன போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா தெரிவிப்பு!

இந்தியாவிற்கு நவீன போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இவ்விடயம் தொடர்பான ஒப்பங்கள் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக...

சவூதி அரேபியாவில் புடினுக்கும் டிரம்ப்புக்கும் இடையில் சந்திப்பு..!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ளார். இருவரும் உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய பின்புலத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி...

டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை நகைப்புக்குரியது; வட கொரிய தலைவர்!

காசா பகுதியைத் தனது நாடு ஆக்கிரமிக்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை நகைப்புக்குரியது என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பாலஸ்தீனத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோர்டான் மன்னர் அப்துல்லாவைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , தனது...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் அதிகரிக்கும் சாத்தியம்..!

கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 25% வரி விதித்ததன் ஊடாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது. இருப்பினும், கடந்த சில நாட்களில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வரிகளின் தாக்கம் நீண்ட காலத்திற்கு எண்ணெய் தேவையை அச்சுறுத்துவதால் ஒட்டுமொத்த எண்ணெய் விலைகள்  குறைந்துள்ளன. கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு கச்சா...

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்வதில் குறித்த சட்டத்தரணிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த நிலையில், அவர்கள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதில் நம்பிக்கையீனம் காணப்படுவதாக அமெரிக்க பதில் சட்டமா அதிபர் ஜேம்ஸ் மெக்கென்ரி தெரிவித்துள்ளார். பதில் சட்டமா அதிபரின்...

கொலம்பியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப் போகும் அமெரிக்கா!

நாடுகடத்தப்பட்ட ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை தரையிறக்குவதற்கு மறுத்ததையடுத்து கொலம்பியா மீதான வரிகளை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதுடன் பொருளாதாரத் தடைகளையும் விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்போது காணப்படும் 25 சதவீத வரிகள் 50...

ட்ரம்பின் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை மெக்சிகோ நிராகரிப்பு..!

ஏதிலிகளை நாடு கடத்தும் இராணுவ விமானத்தை தரையிறங்க அனுமதிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை மெக்சிகோ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரி ஒருவரையும், மெக்சிகோவின் அதிகாரி ஒருவரையும் மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அமெரிக்க இராணுவ விமானம் கடந்த வெள்ளிக்கிழமை குவாத்தமாலாவுக்கு சுமார் 80 ஏதிலிகளுடன் இரண்டு விமானங்களை அனுப்பியது. எவ்வாறாயினும்,...

ஆண் – பெண் பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்..!

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பதவியேற்றுள்ளார். இதன் ஊடாக, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் தான் பதவியேற்ற முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த...

78 நிர்வாக நடவடிக்கைகளை இரத்து செய்த ட்ரம்ப்..!

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பதவியேற்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தேவைப்படும் 270 தொகுதிகளை விடவும் அதிகமாக 312 தொகுதிகளில் குடியரசுக்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img