Monday, July 27, 2026
No menu items!

அமைச்சரவை அங்கீகாரம்

நெல் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறை அமுல்..!

திட்டவட்டமான அளவுகோல்களின் பிரகாரம், நாளாந்த நெல் குற்றும் கொள்ளவு உயர்ந்தபட்சம் 25 மெற்றிக்தொன் வரைக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு (கூட்டுறவுச் சங்க நெல் ஆலைகள் உள்ளடங்கலாக) அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் உயர்ந்தபட்சம் 50 மில்லியன் ரூபாய்கள் வரைக்கும் நெல் கொள்வனவுக்கான அடகுக்...

அச்சக திணைக்களத்தின் புதிய தலைவர் நியமனம்..!

தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அலுவலர் கே.ஜி.பி. புஸ்பகுமாரவை அச்சக திணைக்களத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது. அரச அச்சக திணைக்கள தலைவராக சேவையாற்றும் ஜி. கே.டி.லியனஹேவின் சேவைக்காலம் 2024.12.24 திகதி முடிவடைந்துள்ள நிலையிலேயே அந்த பதவி வெற்றிடத்துக்கு இந்த...

ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்..!

2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட கலால் வரிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிபந்தனைகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வர்த்தக வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நிபந்தனைகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க நிதி, கொள்முதல் மற்றும் பொருளாதார...

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு..!

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும்...

காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்!

காலி முகத்திடல் மைதானம் சமய வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையின் நிர்வாகக் கம்பனியான இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் கம்பனியின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்ற காலி முகத்திடல் மைதானம் சமய வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய...

புதிய அரசாங்க பகுப்பாய்வாளர் நியமனம்!

அரசாங்க பகுப்பாய்வாளராக திருமதி பத்திரகே சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், அரசாங்க பகுப்பாய்வாளராக கடமையாற்றிய திருமதி தீபிகா செனவிரத்ன 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஓய்வுபெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன்படி, இலங்கை விஞ்ஞான...

மீன்பிடித் துறைமுகங்களின் படுகைகளில் காணப்படும் மணலை அகற்ற அமைச்சரவை அங்கீகாரம்..!

இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மூலம் முகாமை செய்யப்படும் மீன்பிடித் துறைமுகங்களின் படுகைகளில் காணப்படும் மணலை அகற்றுவதற்காக கருத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் 22 மீன்பிடித் துறைமுகங்களில் மணலை அகற்றுவதற்கான விருப்பு மனுக்கோரல்களைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 2024.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய,...

இன்று முதல் வட்டியில்லா கல்விக்கடன் !

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக பதினைந்து இலட்சம் ரூபாய் வரை ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம்...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img