Wednesday, July 22, 2026
No menu items!

அரசாங்கம்

அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்க முடியாது; அரிசி மொத்த விற்பனையாளர்கள்!

அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு செய்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். 5 முதல் 10 ரூபாய்க்கு இடைப்பட்ட இலாபத்தில் அரிசியை எவ்வாறு விற்பனை செய்வது. அதேநேரம், நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தநிலை தொடருமாயின் அரிசி வர்த்தகத்தைக் கைவிட நேரிடும்...

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானம்..!

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சந்தையில் தற்போது நாட்டரிசி மற்றும் ஏனைய அரிசி வகைகளுக்கு நிலவுகின்ற பற்றாக்குறை மற்றும் கடும் மழையினால் நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு...

விசேட தேவையுடையோர்க்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானம்..!

விசேட தேவையுடைய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வர உள்ளது. பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்கள் – நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை..!

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகள் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடுவழங்குமாறு இறால் வளர்ப்பு  பண்ணையாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். வவுணதீவு பிரதேச செயலகபிரிவிலுள்ள கரையாக்கன்தீவு பகுதியில் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் கடந்த...

தேர்தல் மேடைகளில் கூறியவற்றை செய்ய  முடியாமல் தடுமாறும் அரசாங்கம்; சஜித்!

ஜனாதிபதி மாறினாலும் அரசாங்கம் மாறினாலும், சர்வதேச நாணய நிதியத்திடம் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் நிபந்தனைகளை மாற்றியமைக்கப் போவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்...

NPP அரசாங்கம் இன அல்லது சமூகக் குறிப்புகளை எந்த வகையிலும் ஒப்புக் கொள்ளாது; பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் உள்ளடக்கம் இல்லாதது பற்றிய விமர்சனங்களைத் தூக்கி எறிந்தார், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்கள் அல்ல என்றும் கூறினார். உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது நியாயமற்ற விமர்சனம் என்றும், NPP யின்...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்க நடவடிக்கை!

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத், புதிய பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் மேற்படி சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார். இது தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இணையவழி...

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்!

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைவாக எதிர்காலத்தில் சரியான முறைமை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக வெளியான தகவல்!

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் இதுதொடர்பில் யோசனை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பள அதிகரிப்பை எத்தனை ரூபாவால் மேற்கொள்வது என்பது தொடர்பில் தற்போது அறிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

புதிய கடவுச் சீட்டில் உள்ள மொழி முக்கியத்துவம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை; விஜித ஹேரத்!

புதிய கடவுச் சீட்டில் உள்ள மொழி முக்கியத்துவம் தொடர்பிலும் கடவுச்சீட்டுக்குள் இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் இந்த அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அச்சிடுவதற்கு எஞ்சியிருக்கும் கடவுச்சீட்டுகளில் மொழி முக்கியத்துவத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img