Tuesday, July 21, 2026
No menu items!

அரசாங்கம்

தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன்கள்..!

விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

பெருந்தோட்ட சமூகத்தினருக்கான சாசனத்திற்கு; அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் மலையக பெருந்தோட்ட சமூகத்தினருக்கான சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கான சாசனம் அரசாங்க முயற்சிகளுக்கு வழிகாட்டும் அடிப்படை ஆவணமாக வரையப்பட்டுள்ளது. இது மலையக பெருந்தோட்ட சமூகத்தை பரந்த சமூக பொருளாதார கட்டமைப்பிற்குள் முழுமையாக ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடைய அரசாங்கத்திற்கு உதவுகிறது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, மேற்படி சாசனத்தை அமுல்படுத்துவதன் மூலம், பெருந்தோட்ட...

அரச ஊழியர்களின் வேதனம் அதிகரிக்குமா!

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் குறைந்தபட்ச வேதனம் ரூ. 55,000 ஆக உயர்த்தப்படுமெனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கம் தயாரித்துள்ள பாதீட்டுக்கு அமையத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் முறைகளின் ஊடாக ஆசிரியர்களின் வேதனத்தினை அதிகரிக்கவுள்ளதாக...

முட்டை இறக்குமதி தொடர்பான அறிவித்தல்…!

விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வதன் ஊடாக உள்நாட்டு தொழில் அழிவை சந்திக்கும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பதவி வெற்றிடமாக இல்லை ; பிரதமர் தினேஷ் குணவர்தன!

பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தேசபந்து தென்னகோனை இடைநிறுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்க மறுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை நிராகரித்து தீர்ப்பை வழங்குமாறு சபாநாயகரிடம் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். பொலிஸ் மா அதிபரின் பதவி வெற்றிடமாக இல்லை...

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை…!

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட...

நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!

விவாகரத்து சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு, 'குறைபாடில்லா விவாகரத்து' என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்துள்ளார். 'குறைபாடில்லா விவாகரத்து' தொடர்பான வரைவு மசோதா ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் விவாகரத்து வழக்குகளில் வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை இலங்கை நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ள புதிய சட்டம் அனுமதிக்கும்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்…!!

நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் விதை மூலதனத்தை வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியினால் நேற்றைய தினம் குருநாகலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாக்கத்தை அங்கீகரிக்கும் நோக்கில் “விகமானிக ஹரசர” முயற்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று குருநாகல் சத்தியவாடி மைதானத்தில் நடைபெற்றது. இதற்கமைய இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பை...

முட்டை இறக்குமதி குறித்து இன்று இறுதி தீர்மானம்!

இன்று (22.07) முதல் ஒரு முட்டை 42 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவை குறைக்காவிட்டால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடையும் ; சபா குகதாஸ் !

நாட்டில் 15 லட்சம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற் சங்கங்கள் தொடர்ச்சியான பாரிய தொழிற்சங்கப் போராட்டங்களை சம்பள உயர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக மேற் கொள்கின்றனர். இதனை உரிய முறையில் எதிர் கொள்ள அரசு தயாராக இல்லை காரணம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துளியளவு கூட மீள எழவில்லை மாறாக மக்கள் மீது திணிக்கப்பட்ட வரி...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img