Tuesday, July 28, 2026
No menu items!

எஸ். ஜெய்சங்கர்

அனர்த்த உதவியாக இரண்டு கள மருத்துவமனைகள்-70க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவப் படையினர் இலங்கையில்..!!

'டிட்வா' சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில், 70 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுடன் கூடிய இந்திய விமானப்படையின் பாரிய C-17 ரக விமானம்  நேற்று (மாலை) கொழும்பில் தரையிறங்கியது. இந்தியா வழங்கியுள்ள விரைவாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு கள மருத்துவமனைகளின் (Field Hospitals) முதல்...

இந்தியா–இலங்கை உறவுகள் குறித்து ஜெய்சங்கர்–சஜித் பிரேமதாசா சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நியூடெல்லியில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து, இந்தியாவின் “அயல்நாட்டு முன்னுரிமை” (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என உறுதிப்படுத்தினார். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது...

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவின் புது தில்லியை சென்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான முதல் உயர்மட்ட சந்திப்பை தொடங்கினார். ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, இச்சந்திப்பில் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஹரிணி அமரசூரிய அக்டோபர் 18 வரை இந்தியாவில் தங்கியிருப்பார்....

“கச்சத்தீவை ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம்” – இந்திய அரசியல் முரண்பாடுகளை சுட்டிகாட்டும் விஜித ஹெராத்!

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இலங்கைக்கு இல்லையெனும் உறுதியான விடையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் வழங்கியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் இந்த விவகாரத்தில் பிரதிபலிக்கின்றன என்றும், அதனை இலங்கை அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர வழிகள்...

இலங்கையின் முன்னேற்றத்திற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது இந்தியா…

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், புது டெல்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றுள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்துள்ளார். இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டமை மற்றும் அனுதாபம் தெரிவித்தமையை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார். இந்தியாவின் அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை குறித்தும்,...

இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகைத்தர உள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி  எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி...

இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியின் போது அதிக உதவியை வழங்கிய இந்தியா!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”எமது அண்டைய நாட்டுக்காக எமக்கு ஒரு பொறுப்பு உள்ளதைப் போன்று எமது அண்டைய நாட்டுக்கும் அவ்வாறான பொறுப்பு உள்ளது” என இந்திய வெளிவிவகார அமைச்சர்...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன்  ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்!

ஓமானில் நடைபெற்ற 8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.    

ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் சீன, இந்திய அதிகாரிகள்..!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் சீனா, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் சீனா ஜனாதிபதி ஜின்பிங் சார்பில் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்துகொள்கிறார். அமெரிக்கா ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் சீன மூத்த அதிகாரி ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை...

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகை!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அமைச்சரின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் அக்டோபரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது விஜயத்தின் போது, ​​எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் புதிய நிர்வாகத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் ஜனாதிபதித்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img