Thursday, June 25, 2026
No menu items!

காவல்துறையினர்

வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம, படவல, பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் இன்று (17) காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மிதிகம காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (17) அதிகாலை 2.10 அளவில் மிதிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பத்தேகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்...

தம்பதியினரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற இருவர் கைது!

கார், பணம் மற்றும் நகைகளைத் திருடியதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (16) மதியம், திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான் பார்க்கும் இடத்திற்கு ஒரு ஜோடி வந்திருந்தது. காரில் வந்த மூன்று நபர்கள், தம்பதியினரை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருகோணமலை காவல் நிலையத்தில் செய்யப்பட்ட...

ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் மீட்பு..!

T-56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தை, தியோநகர் பகுதியில் இவை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதலின் போது பொதியொன்றினுள் வெடிக்காத நிலையில் 1,400 T-56 ரக தோட்டாக்கள் மீட்கப்பட்டன. குறித்த இந்த சம்பவம்...

ஒன்றுடன் ஒன்று மோதிய 17 வாகனங்கள் – 5 பேர் பலி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது . இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள வீதியில் 18 சக்கர...

மதுபோதையில் காரினை செலுத்திய இளைஞர் கைது!

காவல்துறையினரின் உத்தரவை மீறிப் பயணித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் காரினை செலுத்திய 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பண்டாரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் வீடொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வேளையில் குறித்த நபரை காவல்துறையினர் வீதி போக்குவரத்து சோதனைக்காக நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். எனினும் குறித்த நபர் காவல்துறையினரின் சைகையினை பொருட்படுத்தாமல்...

காவல்துறையின் விசேட சோதனையின் போது போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

நவகமுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நவகமுவ காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடுவல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி!

பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குருகம்மோதர , பதுவத்த வீதியின் 7 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் மாட்டுவாகல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம் பெற்ற வேளையில் முச்சக்கரவண்டியில் பெண்ணொருவரும் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் பெண் கைது..!

திவுலபிட்டிய - ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 280,000 ரூபாய் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் சிறிது காலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்...

மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் உயிரிழப்பு!

சூரியவெவ ரண்தியகம வீரியகம பகுதியில் மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் 38 வயதுடைய தாயும் அவரது 5 வயது மகனும் என தெரியவருகிறது . நேற்று (05) பிற்பகல் 2.30 அளவில், 5 வயதுடைய சிறுவன், வீட்டின் பின்புறம் கட்டப்பட்டுள்ள வெதுப்பகத்தின் பாதுகாப்புக்காவும் , நிறுத்தப்பட்டிருந்த சிறிய...

மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் சிகரெட்டுக்களுடன் இரு பெண்கள் கைது!

மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்,. கைது செய்யப்பட்ட பெண்கள் 32 வயது, 23 வயதை சேர்ந்தவர்கள். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் போது...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img