Saturday, August 8, 2026
No menu items!

குற்றப்புலனாய்வு திணைக்களம்

தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் முன்னிலையில்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.ஜீ.பி தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ஷ!

வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட வந்துள்ளார். மேலும் பேசிய நாமல் ராஜபக்ஷ, இந்த நாட்களில்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கொலை செய்யத் திட்டமிருப்பதாக ஜே.வி.பியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மூலம் வெளிப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர...

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம்!

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளைமறுதினம் புதன்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.

யோசித ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில்!

நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார். பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு...

யோஷித தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதன்படி, அவர் அங்குள்ள ஒரு பொது சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதுக்கடை பதில் நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டதன் பின்னர், யோஷித ராஜபக்ஷ நாளை வரை விளக்கமறியலில்...

வாக்குமூலம் வழங்கிய  மனுச நாணயக்கார!

இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்கார வாக்குமூலம் வழங்கி வருகிறார். தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடி தொழிலுக்காக நாட்டிலிருந்து தொழிலாளர்களை அனுப்பும் E8 விசா ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். இது தொடர்பாகத் தாம் கைது செய்வதற்கு முன்னதாக முன்கூட்டிய பிணைக்கான மனு ஒன்றை முன்னாள்...

மனுஷ நாணயக்கார CIDயில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணைக்கோரி முன்னாள் அமைச்சர்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன்..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்றைய தினம் (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். அத்துடன் அந்த காணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதான...

CIDக்கு அழைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்‌ச..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித்த ராஜபக்‌சவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆஜராக அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாபெரும் சாதனை படைத்த ‘துரந்தர்’

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், பிரபல இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய உலகளாவிய சாதனையைப்...
- Advertisement -spot_img