Friday, May 1, 2026
No menu items!

குற்றப்புலனாய்வு திணைக்களம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் விசாரிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்தார். இதன்படி, அவர் நேற்று முற்பகல்...

பிணையில் விடுவிக்கப்பட்ட குடு சலிந்துக்கு பிடியாணை..!

பிணையில் விடுவிக்கப்பட்ட குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷிக குணரத்னவை கைது செய்யுமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத காரணத்தால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அந்த நிபந்தனையை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாணந்துறை நீதவான்...

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள்..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இடப்பட்டிருந்தமை தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர்...

நாடாளுமன்ற அதிகாரிகளிடம் CID வாக்குமூலம் பதிவு..!

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சில நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்படி, 7 அதிகாரிகளிடம் இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று இவ்வாறு வாக்குமூலத்தை பெற்றுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில்...

66 மில்லியன் ரூபா பெறுமதியுடைய உடைமைகளை திருடிய திருடன் கைது..!

300 தங்கப்பவுணுக்கும் மேற்பட்ட நகையையும் சுமார் 60 லட்சம் ரூபாய் பணத்தினையும் திருடிய திருடனை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்றையதினம் (09.12.2024) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2022...

சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.!

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளித் தொகுப்பு ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21...

ரவி செனவிரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு நிராகரிப்பு!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரும், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வாகன விபத்தொன்று தொடர்பில் வெள்ளவத்தை காவல்துறையினரால் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக்கோரி ரவி செனவிரத்ன இந்த...

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பல வாகனங்கள் காணவில்லை; CID விசாரணை!

பல வாகனங்கள் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஜனாதிபதி அலுவலகத்தில் போக்குவரத்து பணிப்பாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. ஜனாதிபதி செயலாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் போக்குவரத்துப் பணிப்பாளர் பல மணித்தியாலங்களுக்குள் விரிவான...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் !

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இவருக்கு கடந்த 10ஆம் திகதி வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் அமைச்சருக்கு குருநாகல் பொலிஸார்...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் உயர் நீதிமன்ற அறிவிப்பு..!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் குறித்த கப்பலின் கெப்டன் மற்றும் கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தின் பிரதிகளை, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் மீனவ சமூகத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img