Thursday, April 30, 2026
No menu items!

குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13.12.2024) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நெவில் சில்வா கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி...

ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா மோசடி – வைத்தியர் கைது..!

தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொனஹேன, பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளர் ரேணுக பெரேராவிற்கு பிணை..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (5) பிணை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நடைபெற்ற மகாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொய்யான தகவல்களை பரப்பியமைக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளர்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட  மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலி ஜோதிடரின் திருட்டுச்செயல்! – ஏமாற்றப்பட்ட வர்த்தகர்..!

அனுராதபுரம் விமான நிலைய வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய வர்த்தகர் ஒருவரிடம் வீட்டுத் தோட்டத்தில் போலி ரத்தினக் கற்களை புதைத்து வைத்துவிட்டு, தோட்டத்தில் புதையல் புதைக்கப்பட்டிருப்பதாக உரிமையாளரை தவறாக வழிநடத்தி, அதை வெளிக்கொணரும் வகையில் சடங்குகளை மேற்கொண்டு  அவரை ஏமாற்றி, புதையல் தோண்டியதற்கான பகுதிக் கொடுப்பனவாக ரூ.2.9 மில்லியன் பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றுள்ளார்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது..!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி...

ஜனாதிபதி தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தி வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஏற்பட்ட சுகவீனம் தொடர்பான தவறான மருத்துவ அறிக்கையை இணையத்தில் வெளியிட்டமை...

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள் தயாரித்தவர் கைது !

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிப்பு!

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமாக கூடியிருந்த சொகுசு வாகனம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றினால் தலா 5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஒக்டோபர் 23 ஆம் திகதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகன வழக்கில் மேலும் இருவர் நீதிமன்றில் முன்னிலை!

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW மகிழுந்து தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பிலிருந்த நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஐப்பசி மாதம்  (23) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img