Saturday, April 25, 2026
No menu items!

சந்தேக நபர்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழு தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மனுவை தாக்கல் செய்த குழு, 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05...

ஓடும் பஸ்ஸிலிருந்து பெண் ஒருவரை கீழே தள்ளிவிட்ட நபர் கைது!

ஓடும் பஸ்ஸில் இருந்து பெண் ஒருவரை கீழே தள்ளிவிட்டுக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய திருமணமான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரும் காயமடைந்த பெண்ணும் நீண்ட காலமாகத் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இருவரும் பொலன்னறுவையில்...

கடல் ஆமைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது !

இளவாலை - சேந்தான்குளம் பகுதியில் மூன்று கடல் ஆமைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. வெலிகம உட்பட தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் எல்ல மற்றும் கொழும்பு பகுதிகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதாக  பொலிஸ் ஊடகப்...

சட்டவிரோதமாக அகழப்பட்ட 14 டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்பு…

கிளாலி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14 டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரட்ண ,அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி கிளாலி பகுதியில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.குலரட்ண தலைமையில் பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் குறித்த 14டிப்பர்...

ஒல்லாந்தர் காலத்து கேடயம் மற்றும் நாணயங்களை விற்பனை செய்ய முயன்றவர் கைது!

ஹட்டன் பிரதேசத்தில் ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய முயன்றவர் சந்தேக நபரொருவர் இன்று (17) ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்த இந்த கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை 20 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார். சந்தேக நபர் கினிகத்தேனை பிரதேசத்தைச்...

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய நபர் கைது!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மாதம் ரூ. 100,000 தருவதாக சந்தேக நபர் கூறியுள்ளார். சந்தேக நபர் தொலைபேசி மூலம் பதில் OIC ஐ தொடர்பு கொண்டு இப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலை அனுமதிப்பதற்கு ஈடாக மாதத்திற்கு  ரூ.100,000 தருவதாக கூறியுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச...

யாழில் 25இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய இருவர் கைது…!

சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25இலட்சம் ரூபாய் பெறுமதியான 16பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதுடன், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்தாம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டுத் தப்பித்திருந்தனர். கணவன்,...

யாழில் பல இலட்சம் பணத்தை எரித்த நபர் கைது!

யாழில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றையதினம்(10.10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அராலியை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டுக்கு முன்னால் ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார். அதன் பின்னர் வட்டுக்கோட்டையில்...

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொட்டுகுடா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img