Wednesday, July 29, 2026
No menu items!

சந்தேக நபர்

பெரும் தொகையான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சிக்கிய நபர்..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 32 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை  (14.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் அபுதாபியிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.00...

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் – வயோதிப தம்பதி மடக்கி பிடிப்பு!

நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ்...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து 40 வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிபென்ன பட்டேகொட, வலகெதர பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 35 வயதுடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்...

திருட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது..!

யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த...

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – இளைஞன் கைது..!

வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞன் ஒருவன் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை, பரசன்குளம் பகுதிக்கு கெப் வாகனத்தில் சென்ற குழு ஒன்று கொலை செய்யப்பட்டவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி...

பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகை அபகரித்த குழு கைது..!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம்,நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸார் (29.11.2024) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். இதன்போது பூசகரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒன்றரைப் பவுண் சங்கிலி,பூசகரிடம் பறிக்கப்பட்ட நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் பூசகருடைய சங்கிலியை விற்றுப் பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம்...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது..!

கடந்த சில காலமாக பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (27.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணகி நகர் பகுதியில் உறவினரின் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் கொட்டும் மழையில் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண் அணிந்திருந்த தாலியினை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட வேளை...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

குருணாகல், கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலகம்மில்லவ பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரியுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குருணாகல், மீவெல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில்...

வவுனியாவில் பெண் மீது துப்பாக்கிச்சூடு!

ஈச்சங்குளம் பகுதியில் பெண் ஒருவரை தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய சந்தேகநபர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் நேற்று (19) கைதுசெய்யப்பட்டதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை சுட பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டு குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் கைது!

இரு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 54 வயதுடைய கணித ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அதே பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img