Monday, April 20, 2026
No menu items!

சமன் ஸ்ரீ ரத்நாயக்க

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்…!

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து 66 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் ஜனாதிபதி தனக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என எண்ணினால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு நடந்தால் ஐந்து...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளும் கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தமது கருத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு….

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்த முழுமையான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டாலும் பதவியை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் 03ஆம்...

வாக்காளர்களை பணத்திற்கு விற்க முடியாது; சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிப்பு…!

நாட்டின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் பரிவர்த்தனை பணத்திற்கு விற்கக்கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.  தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை என அவர் இதன்போது...

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகை….!

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கென இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வாகன அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர்...

ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு…!

ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரை 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 14 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் மேலதிகமாக 200 மில்லியன் ரூபா நிதியை செலவிட நேரிட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...

வாக்காளர்கள் நுகர்வோர்களாக மாறிவிட்டனர்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்..!!

தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் தானங்களை நடத்தி, பொருட்களை விநியோகித்தல் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதனால் வாக்காளர்கள் தற்போது நுகர்வோர்களாக மாறியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் தென் மாகாண அரசாங்க அதிகாரிகள், தேர்தல்...

1000 கோடி ரூபாய் செலவில் ஜனாதிபதித் தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி ரூபா (10 பில்லியன் ரூபா) செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் இது தொடர்பான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போதுள்ள அரசியலமைப்பு நிலவரத்திற்கமைய,, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல்...

2024ல் ஜனாதிபதித் தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img