Monday, April 20, 2026
No menu items!

சமன் ஸ்ரீ ரத்நாயக்க

இரண்டாவது நாளாக தொடரும் தபால் மூல வாக்களிப்பு!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் குறிக்கும் பணி ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (01) இரண்டாவது நாளாக இடம்பெற்றது. அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள்...

தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றது ; தேர்தல் ஆணையாளர் நாயகம்!

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) இடம்பெற்றதாகவும், அது அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்து இன்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்தார். மேலும், எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும்...

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த தடை!

எந்த ஒரு மாவட்டம் அல்லது நகரத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பிரசாரம் மேற்கொள்ளப்படுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். "உங்கள் மாவட்டம் அல்லது நகரத்தில் எந்த வகையான தேர்தல் பிரச்சாரத்திற்கும் டிஜிட்டல் திரை பயன்படுத்தப்பட்டால்,...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்…!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் பின்னர் முடிவுகள் காலி தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும் என்றும்...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 759,210 அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார் அதில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் மூல விண்ணப்பங்களின் படி,...

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது…!

பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆகும். இதேவேளை, தேர்தல் தொடர்பில் 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, தேர்தல் சட்டங்களுக்கு...

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று வெளியிடப்படும்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16.10) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களின் விருப்பப்பட்டியல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை சரிபார்த்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டி…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில், 966 பேர் ஆசனங்களுக்காக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்கள் உட்பட மொத்தம் 50 குழுக்கள் கொழும்பில் வேட்பாளர்களை...

பாராளுமன்றத் தேர்தலில் 10,000 வேட்பாளர்கள் போட்டி…!

பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 10,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 764 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள நிலையில், அதில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி,...

விருப்பு எண்கள் வெளியிடுவது தொடர்பில் அறிவித்தல்…!

ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img