Thursday, July 16, 2026
No menu items!

சீனா

வர்த்தகப்போரை அடிப்படையாகக் கொண்டு அச்சுறுத்தல் விடுக்க கூடாது – சீனா வலியுறுத்தல்!

சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளமையால் வர்த்தகப்போரை அடிப்படையாகக் கொண்டு அச்சுறுத்தல் விடுக்க கூடாது'' என அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது...

சீன பொருட்களுக்கு 245 வீத இறக்குமதி வரி விதிப்பு அமெரிக்கா!

சீன பொருட்களுக்கு 245 வீத இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் பிரச்சினையில் ஒரு பெரிய அதிகரிப்பில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சீன இறக்குமதிகள் மீதான வரிகளை கடுமையாக...

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளிற்கு ட்ரம்ப் வரி விலக்கு விதிப்பு..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2ஆம் திகதி, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது....

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரி அதிகரிப்பு!

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனா இன்று (11) பதிலளித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளை தெளிவுபடுத்திய வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகள் மீதான வரிகளை 145% ஆக அதிகரிப்பதாக நேற்று (10) அறிவித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இன்று...

சீன ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடுவதற்கு முன்வருவார் ; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

அமெரிக்காவின் தன்னிச்சையான வரி அதிகரிப்பை அடுத்து, சீன ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடுவதற்கு முன்வருவார் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பி இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பர தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார். இது நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், 90 நாட்களுக்கு அவகாசம்...

சீனா மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியது அமெரிக்கா..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மொத்தம் 145 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்ட 125 சதவீதத்தை விட இது அதிகம் என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. ட்ரம்ப் சுமார் 60 நாடுகள் மீதான தனது "தீர்வை வரிகளை" 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்..!

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், சீனாவிற்கான வரியை அவர் அதிகரித்துள்ளதுடன் இது அமெரிக்க - சீன வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் பல உலக நாடுகளுக்கான அமெரிக்காவின் புதிய வரி அமுலுக்கு வந்திருந்தது. இதன்படி,...

சீன பொருட்களுக்கு 104% வரி விதித்த ட்ரம்ப்..!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104% வரியை விதித்துள்ளது. இது இன்று (4/9/2025) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வரிகளை நீக்குவது குறித்து தாம்...

டீப் சீக் செயலியை பயன்படுத்த தொடங்கியது சீன இராணுவம்..!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகளை செய்து வரும் சீனா சில மாதங்களுக்கு முன் டீப் சீக் என்ற செயலியை உருவாக்கியது. இந்நிலையில் சீன இராணுவ வைத்தியசாலைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவான டீப் சீக் செயலியை சீன இராணுவம் பயன்படுத்த தொடங்கி உள்ளது. வைத்தியர்களுக்கான சிகிச்சைத் திட்டங்களைப் பரிந்துரைப்பது, மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற சிகிச்சை...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img