Sunday, November 8, 2026
No menu items!

ஜனாதிபதித் தேர்தல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இன்று முதல் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தேர்தல் ஊர்வலங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை கடைபிடிக்க அனைத்து ஸ்டேஷன்களுக்கும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணியும் இன்று ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட அறிவித்துள்ளார். தேசிய தேர்தல்...

விளக்கு ​​சின்னத்தில் சரத் பொன்சேகா..!

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” விளக்கு ​​சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு மேலும் பலர் ஆதரவு….!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் பாராளுமன்ற...

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகை….!

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கென இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வாகன அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர்...

சஜித் பிரேமதாசவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு!

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது  சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற...

தேர்தல் தொடர்பில் வெளியான 408 முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 408 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்று வன்முறைச் செயலும் , 392 தேர்தல் விதிகளை மீறிய முறைப்பாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் திகதி  அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்புமனு தாக்கல் வரை பதிவாகும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக...

ஆரம்பமாகவுள்ள தேர்தலுக்கான அச்சுப்பணி..!

இவ்வாண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் நாளை(16.08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சக அலுவலர் கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார். இன்று(15.08) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தவுடன் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இது வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், 2019 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்துடன் ஒப்பிடுகையில், வாக்குச்...

இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் காலப்பகுதியில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில், ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உட்பட...

நிறைவடைந்த கட்டுப்பணம் செலுத்தும் காலம்…

இவ்வாண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 40 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சகலதுறை கிரிக்கட் வீரர்..!

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று(14.08) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டுள்ளார். ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், சிறிது காலம் அதன் தலைவராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img