Wednesday, July 22, 2026
No menu items!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி தலைமையில் அவசர சர்வகட்சி கூட்டம் இன்று ..!

அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் வெளியீடு..!

தூய்மையான தேசத்தை நோக்கி என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" இன்று (4/9/2025) கொழும்பில் வௌியிடப்பட்டது. இந்த தேசிய திட்டத்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவரும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான...

அமெரிக்காவின் வரி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையினூடாக தீர்வை எட்ட முடியும் – ஜனாதிபதி!

அமெரிக்காவின் வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையினூடாக தீர்வை எட்ட முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண்டிகை காலத்தில் நாட்டு மக்களுக்கு சதொச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும் எதிர்வரும் மே மாதம் தேர்தல்...

இலங்கையின் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 ஆகும். இது இன்று (ஏப்ரல் 07) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 1.4 மில்லியனுக்கும் அதிகமான அதிகரிப்பைக் குறிக்கிறது. 2024...

புகையிலை வரி அதிகரிப்பு!

அனைத்து பீடி சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வரி, 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.   <!-- -->

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை வெளிப்படுத்த முயற்சிகள்; ஜனாதிபதி!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் குழுவை அம்பலப்படுத்த குற்றப்புலனாய்வு...

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் !

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவித்தார். "ஒரு அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும்,...

தனக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு கடிதம்!..

தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான குழு நிலை வாதத்தின் இறுதி நாள் விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது 1 மில்லியன் ரூபாயாக...

இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்தும், இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக உற்பத்தித் தொழில்களின் பயனுள்ள மேலாண்மை, ஒருங்கிணைப்பு,...

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிப்பு!

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் டபிள்யூ. கே. எஸ். யு. பிரேமச்சந்திரா, கே. மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img