Wednesday, July 22, 2026
No menu items!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்படி, இந்த விவாதத்தின் இறுதி நாளான இன்றும் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம்...

இன்று முதல் வாகன இறக்குமதி..!

வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கமைய, பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான வாகனங்கள், தனியார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் மிதிவண்டி என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோட்டார்...

விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி தெரிவிப்பு..!

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு வாரங்களில் உள்நாட்டு சந்தையில், நிர்ணய விலைக்கு புறம்பாக சந்தையில் அரிசியை விற்பனை செய்யும்...

சீனாவில் ஜனாதிபதி அனுர –  முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா?

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனாவை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தநிலையில், இலங்கை நேரப்படி இன்று காலை 7.50 அளவில் அவர் சீனாவின் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அதன்போது, சீன பிரதி...

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்..!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே இதனைத் தெரிவித்துள்ளார். சுமார் 5 ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் இறக்குமதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் மீள ஆரம்பிக்கும்போது விதிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி விகிதங்களை...

தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு..!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (05.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், காணி விடுவிப்பு மற்றும் காணி அபகரிப்பை நிறுத்துதல், தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை – உபாலி பன்னிலகே தெரிவிப்பு..!

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி...

சபை முதல்வராக நியமிக்கப்பட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க..!

ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சபாநாயகராக சிரேஷ்ட உறுப்பினர் நிஹால் கலபத்தியை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இவர்கள் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாற்றப்படுகின்றது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள்..!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் ஊடாக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை மாற்றுவதற்குத் தாம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தை தங்களது உறவினர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img