Thursday, November 19, 2026
No menu items!

ஜனாதிபதி

வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டுள்ளார். இது தொடர்பான  நிகழ்வு  கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட விஜயதாச ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நீதியமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ இன்று காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நாவலில் உள்ள அவரது இல்லத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது. மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீரவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின்...

மனிதாபிமானத்துக்கு முன்னுரிமையளித்து செயற்படும் அரசாங்கமே தற்போது அவசியம்; சஜித் பிரேமதாச!

மக்களுக்காக முழுமையாக சேவையாற்றக்கூடிய தரப்பினருக்கு மாத்திரமே ஜக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் போது பதவிகள் வழங்கப்படும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் 27 அரசியல் கட்சிகள் நேற்று ஜக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே...

பெரமுன கூட்டணியின் செயலாளர் பதவியை பெறுவது யார்…?

பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் செயலாளர் பதவியை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்க இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் யோசனை தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உறுதியளித்துள்ளார். முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த எம்.பி ஜெயசேகர செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்,...

சுதந்திரமாக சிந்திப்பவர்களை ஈர்க்க மட்டுமே முயற்சிக்கிறேன்; சரத் பொன்சேகா!

பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்ட எம்.பி.யின் ஆதரவை நான் பெற விரும்பவில்லை. மிதக்கும் வாக்குகளை ஈர்க்கவும், சுதந்திரமாக சிந்திப்பவர்களை ஈர்க்கவும் மட்டுமே முயற்சிக்கிறேன்.

கட்டுப்பணம் செலுத்திய 32 வேட்பாளர்கள்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் ஐந்து வேட்பாளர்கள் நேற்றையதினம் டெபாசிட் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மொத்தம் 32 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதில் வாக்காளர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட 15 சுயேச்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும்...

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள கருத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பல சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு முக்கிய வேட்பாளருடன் இணைக்கப்பட்டிருப்பதும், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு பினாமிகளாகக் காட்டிக் கொள்வதும் வெளிப்படையானது என்றார். புதிய விதிமுறைகள் அல்லது அளவுகோல்களின் மூலமே இந்த முறையை மாற்ற முடியும் என மஹிந்த தேசப்பிரிய மேலும்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட விஜித் விஜயமுனித சொய்சா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனித சொய்சா இணைந்து கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திங்கட்கிழமை (12) பிற்பகல் சந்தித்த விஜித் விஜயமுனி த சொய்சா, ஜனாதிபதிக்கு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அரசியல் செய்வதற்கு நாடொன்று இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர்,...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்க தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் இன்று (18) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான...
- Advertisement -spot_img