Wednesday, November 18, 2026
No menu items!

ஜனாதிபதி

தேர்தல் செலவு குறித்து முடிவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு தொகை செலவிட முடியும் என்பது தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்படும் என பெஃப்ரல் அமைப்பின்...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இன்று முதல் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தேர்தல் ஊர்வலங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை கடைபிடிக்க அனைத்து ஸ்டேஷன்களுக்கும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணியும் இன்று ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட அறிவித்துள்ளார். தேசிய தேர்தல்...

உங்களை பணக்காரர்களாக மாற்றலாம்,புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் ;ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்களில் தற்போதைய வேகத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இராஜகிரியவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வெளியே ஆதரவாளர்கள் மத்தியில் தனது வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். "இந்த வேகத்தை...

நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு!

சமகி ஜன பலவேகவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க செல்வதற்கு சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலு குமார் flower வீதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்று விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

வெளியான ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் பெயர்களே தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பாளர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சுயேட்சையாக போட்டியிடுதல். சரத் கீர்த்திரத்ன – சுயேச்சை வேட்பாளர் ஓஷல ஹேரத்...

போதைப்பொருளை தடுக்க புதிய தொழில்நுட்பம் வெற்றியளிக்குமா!

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய பிரிவொன்றினை ஆரம்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதாள உலகில் உள்ள தனிநபர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு குற்றசெயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குறித்த பிரிவின் ஊடாக சட்டங்களை பிரயோகிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ் ,இராணுவம் மற்றும் சிவில் ஏஜன்ஸிகளுடன் உள்ளடக்கியதாக ...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. நேற்றைய தினம்  பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு...

தேர்தல் தொடர்பில் வெளியான 408 முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 408 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்று வன்முறைச் செயலும் , 392 தேர்தல் விதிகளை மீறிய முறைப்பாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் திகதி  அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்புமனு தாக்கல் வரை பதிவாகும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக...

தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? ஜேவிபி சந்திரசேகரன்!

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டியுள்ளார். நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்...

நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு விஜேராமவில் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும புதிய கணக்குகளை திறக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகளை செலுத்துவதற்காக வங்கி கணக்குகளை திறப்பது மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான...
- Advertisement -spot_img