Tuesday, July 28, 2026
No menu items!

நாடாளுமன்றத் தேர்தல்

மஹிந்த ராஜபக்ஷவின் முடிவிற்கு காத்திருக்கும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் முடிவிற்காக காத்திருக்கிறது . ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த சில நாட்களுக்குள் ராஜபக்சே தனது முடிவை எடுப்பார் என்றும், அது அறிவிக்கப்பட்டவுடன் அதன்படி செயல்படுவார்...

பொதுத்தேர்தலில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இன்னும் ஒதுக்கப்படாத சின்னங்களும் வர்த்தமானியில் உள்ளன. செப்டம்பர் 28, 2024 தேதியிட்ட, வர்த்தமானி 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி: http://documents.gov.lk/files/egz/2024/9/2403-66_E.pdf  

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவியேற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது. தற்போதைய...

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் விண்ணப்பங்களை...

நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும்; அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று(29.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே குறித்த பெண்கள் குழு இதனை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாகப் பகிரப்பட...

மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் என நம்புகின்றேன்; டக்ளஸ் தேவானாந்தா!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். நேற்று மாலை யாழ். தெல்லிப்பளை - மாவைகலட்டி பகுதி மக்களை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இடையூறின்றி பொதுத் தேர்தல் நடைபெறும்!

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குக் குறுகிய காலப்பகுதியே காணப்பட்டாலும் அதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26.09.2024) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத் தேர்தலை...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார்; ருவான் விஜயவர்தன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ அல்லது தேசிய பட்டியல் ஊடாக உள்வரவோ மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க தேசிய விடயங்களில் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் செயற்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மாபெரும்...

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் ; அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு!

தற்போது தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை நிலை நிறுத்துவதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி அறிவிப்பை வெளியிடும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எமது நாடு பொருளாதார, அரசியல் சமூக மற்றும் சர்வதேச ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை முன்னோக்கிக் கொண்டு...

பிரித்தானிய பொதுத் தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன் வெற்றி..!

2024ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை (04.07)நடைபெற்றது. அதன்படி, பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img