Sunday, July 19, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் குழுவை சந்தித்த சஜித் பிரேமதாச!

இன்று நாடாளுமன்றத்திற்கு அருகில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் குழுவிடம், அவர்களின் தேவைகள் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்துள்ளார். அரசாங்க வேலைவாய்ப்புகளை கோரி பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசிய வேலையற்ற பட்டதாரிகள், கடந்த தேர்தலின் போது, அரசாங்கம் வேலை வழங்குவதாக...

எஸ்.எம். மரிக்கரை கடுமையாக சாடிய ஜகத் மனுவர்ண!

கறுப்பு ஜூலை' கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் தவறான பிம்பத்தைப் பயன்படுத்தி தவறாக வழிநடத்தியதற்காக, சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கரை தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண கடுமையாக சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணா, ஜூலை கலவரம் குறித்த ஆவணப்படத்தின் போது...

சமூகப் பொறுப்பிலேயே ஒருபெண்ணின் நடத்தை பற்றி பேசினேன் – அர்ச்சுனா எம்.பி..!

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒருபெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர்...

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கத்திடம் முன்மொழிவு..!

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரிஎல்ல தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் நம் நாட்டிற்கு அதிக அளவு அந்நிய செலாவணியை அனுப்பும் ஒரு குழுவாக உள்ளனர். அவர்களை நாம் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களின்...

கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு..!

பொறுப்பு கூறல் விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களைப் போலவே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சு தொடர்பான இன்றைய குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை. சகல அரசாங்கங்களும் அரசை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்...

இந்திய ஆசிரியர்களை அழைத்துவருமாறு நான் கோரவில்லை – இராதாகிருஷ்ணன்..!

” இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுத்தேன் என வெளியான செய்தியில் உண்மை இல்லை.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என நான் கூறவில்லை. 2017...

ஹோமாகமவில் உள்ள மான்களை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லத் திட்டம்..!

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான நல்லுறவு பாதுகாக்கப்பட வேண்டும்; எஸ்.ஸ்ரீநேசன்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு - மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள தரப்பினரை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குழு நிலை விவாதத்தில் இதனைக் குறிப்பிட்ட அவர், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  

விமானப்படையினரின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்; எஸ்.ஸ்ரீநேசன்!

யுத்த காலத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்தை அண்மித்து கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட காணிகளுக்கு இதுவரையில் ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விமானப்படையினரின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

இஸ்லாமிய மதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கவில்லை; MP. அர்ச்சுனா!

பொதுவாக மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளையே தாம் நாடாளுமன்றில் முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கவில்லை என அர்ச்சுனா சுட்டிக்காட்டினார். இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார். சிறுபிள்ளைகளையும், பெண்களையும் மாத்திரமே தாம் கருத்திற் கொண்டு பேசியதாகக் கூறினார். எந்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் செயற்படவில்லை என...
- Advertisement -spot_img

Latest News

சோதனையின்போது தாக்க முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சோதனை செய்ய முயன்ற போது, பொலிஸாரை வாளால் தாக்க முயன்ற நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலியந்தல, போகுந்தர...
- Advertisement -spot_img