Wednesday, July 22, 2026
No menu items!

நியூசிலாந்து

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இன்று களத்தில்..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.45 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளும், 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

துனித் வெல்லாலகே நீக்கம்..!

நியூசிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரிலிருந்து துனித் வெல்லாலகே நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து ஆடுகளங்களின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மேலதிகமாக வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைக் குழாமில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு துனித் வெல்லாலகே நீக்கப்பட்டுள்ளதாக அணித்தலைவர் சரித் அசலங்க குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்துக்கு பயணமாவதற்கு முன்னதாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது...

நியூசிலாந்து அணி அபார வெற்றி..!

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று 658 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 234 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னர்...

சுனாமி எச்சரிக்கை – மக்கள் பதற்றம்..!

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43...

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி…!

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (17.11.2024) இடம்பெறவுள்ளது. பல்லேகலயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது. இதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று…

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.  குறித்த போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூயிஸ் முறையில் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பம்..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று (09) நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது T20 போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், கடைசியாக...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி மின்னேரிய தேசிய பூங்காவிற்கு விஜயம்!

இலங்கை வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மின்னேரிய தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் நேற்று (06) சபாரி ஜீப்களில் சுற்றுலா சென்றுள்ளனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளையும் (08) எதிர்வரும் 10ஆம் திகதியும் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு….!

நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு போடப்பட்டுள்ளமை பயணிகளிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் உறவினர்களை கட்டிப்பிடித்து வழியனுப்பும் முறை உலகளவில் உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து விமானநிலைய அறிவிப்பு போஸ்டரில், 'கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள் என்றும், நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மனிதாபிமானமற்ற செயல்...

2-வது இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்து சாதனைபடைத்த இந்திய வீரர்!

நியூசிலாந்துடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 'டக்-அவுட்' ஆன சர்ப்ராஸ் கான் 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டக்அவுட்டாகி 2-வது இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே இந்திய வீரர்களில் மாதவ் ராவ், நயன்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img