Wednesday, July 22, 2026
No menu items!

பாராளுமன்றம்

கூடவுள்ள பாராளுமன்றம்!

பாராளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் 2025.01.10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஜனவரி 21 ஆம் திகதி...

மன்னார் துப்பாக்கிச் சூடு –  பொலிஸாரை சாடிய அடைக்கலநாதன் எம்.பி..!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம் (16/1/2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்  நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம்...

நாம் எதிர்பார்க்கும் மாற்றம் பலவந்தமாக செயல்படுத்தக்கூடிய ஒன்றல்ல; ஹரினி அமரசூரிய!

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் பலவந்தமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல, மாறாக அது அனைவரின் விருப்பத்திற்கும் பங்கேற்பிற்கும் அடிப்படையாக அமைய வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். தூய்மையான இலங்கை...

விரைவில் வரவு செலவுத் திட்டம் சபையில்..!

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவு மீதான விவாதத்தை பெப்ரவரி 18 முதல் மார்ச் 21 வரை 26 நாட்களுக்கு நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி...

அதிக வாடகை செலுத்தும் அரச நிறுவனங்களை அரச கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானிப்பு-சுனில் ஹந்துன்நெத்தி..!

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஐம்பது இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக வர்த்தக...

இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றுக்கு..!

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2025 ஆம் நிதியாண்டிற்கான சேவைகளுக்கான புதிய ஏற்பாடுகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும். இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கையை விவாதிக்க தீர்மானம்!

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலும் அனுமதி வழங்கபட்டுள்ளது.

ராஜபக்‌ஷைகளில் ஒருவர் விடைபெற்றார்…!

முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கேட்டபோது, ​​கலாநிதி ராஜபக்ஷ அந்த யோசனையை உறுதியாக நிராகரித்தார். நாடாளுமன்றத்தில் உள்ள...

10ஆவது பாராளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு!

10ஆவது பாராளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவித்தார். அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு காஞ்சன விஜேசேகரவை பரிசீலிக்குமாறு கோரிக்கை; ஜீவன் தொண்டமான்!

புதிய பாராளுமன்றத்திற்கு எதிர்கட்சியில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் தேவை என்பதை எடுத்துக்காட்டி, கட்சியின் எஞ்சிய தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை பரிசீலிக்குமாறு தேசிய ஜனநாயக முன்னணியிடம் (NDF) முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தை...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img