Sunday, June 7, 2026
No menu items!

பொதுத் தேர்தல்

திலித் ஜயவீரவை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானம்…!

'சர்வஜன பலய' கூட்டணியின் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான திலித் ஜயவீரவை கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக 'சர்வஜன பலய' கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை கூட்டணியின் செயற்குழு ஏகமனதாக எட்டியதாக 'சர்வஜன பலய' அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, சர்வஜன பலய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற...

10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு…!

இம்முறை பொதுத் தேர்தலில் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கலாநிதி ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசிங்க, ஹேமாலி சுஜீவா, நிலந்தி கோட்டஹச்சி, ஒஷானி உமங்கா, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா...

வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று திரும்புபவர்களுக்காக விசேட பேருந்து சேவை…

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று கொழும்பு திரும்பிய மக்களுக்காக இன்று (16.11.2024) முதல் விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென  இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். நாளையும் (17.11.2024) நாளை மறுதினமும் (18.11.2024) இந்த விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மக்களின் வசதிக்காக தனியார்...

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கிய வேட்பாளர் கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறி கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வேட்பாளரிடம் ஏற்கனவே 97,200 ரூபா பணம் இருந்ததுடன், அந்தப் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற ஆதிவாசிகள்!

பொதுத் தேர்தலுக்காக, தம்பானை ஆதிவாசி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற ஆதிவாசி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற சம்பவம் இன்று (14) காலை பதிவாகியுள்ளது. ஆதிவாசியினரின் கலாசாரத்தின் அடையாளமான “கோடாரி” யை சுமந்துகொண்டு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்ததாகக் கூறி ஆதிவாசி துணைத் தலைவருக்கு...

மதியம் 1 மணிவரையான வாக்களிப்பு வீதம் வெளியானது!

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று 1 மணிவரை அளிக்கப்பட்ட வீதம் கொழும்பு - 54% கண்டி - 30 % நுவரெலியா - 50 % பதுளை - 48% திகாமடுல்ல - 37 % மட்டக்களப்பு - 32 % கேகாலை - 32 % புத்தளம் - 30 % மாத்தறை - 34 % களுத்துறை - 20 % திருகோணமலை - 45 % குருநாகல்...

பொதுத் தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்திய சஜித் பிரேமதாச!

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பினை இன்று காலை இராஜகிரியவில் உள்ள வாக்குச் சாவடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான முறையில் நடைபெறும் வாக்களிப்பு நடவடிக்கை!

இலங்கையின் 10 வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் திட்டமிட்டதன் அடிப்படையில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சுமுகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு வருவதையும் காணமுடிகின்றது. பாராளுமன்றத்...

வெளியாகிய தேர்தல் வாக்களிப்பு வீதம்!

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 10 மணிவரை அளிக்கப்பட்ட வீதம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 20% கண்டி 25 % நுவரெலியா 20 % பதுளை 21 % திகாமடுல்ல 18 % மட்டக்களப்பு 15 % கேகாலை 20 % புத்தளம் 22 % மாத்தறை 10 % களுத்துறை 20 % திருகோணமலை 23 % குருநாகல் 22 % பொலன்னறுவை 22 % யாழ்ப்பாணம் 16 %

தனது வாக்கினை செலுத்திய தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்!

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பினை இன்று காலை யாழ்.குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள வாக்குச் சாவடியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் வாக்களித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img