Friday, November 13, 2026
No menu items!

பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விசேட நாட்கள் இன்று ஆரம்பம்!

2024 பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு விசேட நாட்கள் இன்று ஆரம்பமாகின்றன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச துறை ஊழியர்கள் இன்றும் நாளையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு போதிய விடுமுறை வழங்காத முதலாளிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 122 ஆம் சரத்தின் கீழ் வாக்களிப்பதற்காக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு முதலாளிகள் சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளனர் என...

பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்!

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை) 1,794 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 428 முறைப்பாடுகளும்,...

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளும் தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள பெட்டகங்களில் வாக்குச் சீட்டுகள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 17,140,354 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய 8 வேட்பாளர்கள் கைது!

பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்தை மீறி ஒட்டப்பட்ட 9 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் 4 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல்...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு மத்திய நிலையங்களாக அறிவிக்கப்பட்டிருந்த 60 விகாரைகள் வாக்களிப்பு நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு மாற்றீடாக வேறு இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில நேற்று (05) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தேர்தல் இடம்பெறும் தினத்தன்று பெளத்த கட்டின பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றமையினால், அது தேர்தல் செயற்பாடுகளுக்கு...

பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்!

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை) 1,642 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும்,...

பொதுத் தேர்தலுக்கான 70 வீத வாக்குச் சீட்டுகள் விநியோகம்!

2024 பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 70% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் நாளை மறுதினம் அதாவது நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ரஜித் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதற்குள் உங்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சாவடி...

அதிகரித்துள்ள பொதுத் தேர்தல் முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1535ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 376 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1159 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 01 பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய தேர்தல் தொகுதிகளின் ஒருபக்கத்தில் மாத்திரம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் நாட்டின் ஏனைய தொகுதிகளில் வாக்குச் சீட்டுகள் இரண்டு பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும்...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img