Friday, November 13, 2026
No menu items!

பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் புதிய செயல்முறை!

வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக இடது கையின் ஆள்காட்டி விரலில் குறிக்கப்படும். இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் விரலோ குறிக்கப்படும். 2024ஆம் ஆண்டு...

பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு!

2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் உச்ச நீதிமன்றில்...

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 180 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 357 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல்...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 03 ஆகிய தினங்களில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் தினங்களாக கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர்...

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறை இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக அஞ்சல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.   <!-- -->

பொதுத் தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் நீக்கம்!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்ட 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றியுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனராக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 759,210 அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார் அதில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் மூல விண்ணப்பங்களின் படி,...

விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்கழு மேலும் தெரிவிக்கையில், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடந்து அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாத விசேட தேவையுடைய...

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மனு தாக்கல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி எடுத்த தீர்மானத்தையடுத்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம், அதன் உறுப்பினர்கள், வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உட்பட மேலும்...

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை வேட்பு மனுத் தாக்கல் செய்த ஓரிரு நாட்களில் அதிகரித்து வருகின்றது. அதனடிப்படையில் இதுவரை 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img