Saturday, June 13, 2026
No menu items!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

புதிய அரசை கோட்டாபய அரசுடன் ஒப்பிட்டுக் கூறிய கோவிந்தன் கருணாகரம்..!

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி கணிப்பிட்டாரே அதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தற்போதைய ஜனாதிபதியும் அவருடைய கட்சியும் நடாத்துகின்றது எனவே இதனை உணர்ந்து கொண்டு ஒரே நாடு நாங்கள் எல்லாம் சமத்துவமான மக்கள் என கூறும் இந்த ஜனாதிபதி இதனை உணர்ந்து கொண்டு எதிர்காலத்தில் இப்படியான தவறுகளை விடாமல் நடக்கவேண்டும்...

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள்..!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை ஒதுக்குவதற்கு அனுமதியளித்து மடிவெல வீடமைப்பு வளாகத்தில் உள்ள அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வீடுகளை காலி செய்துள்ளனர். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹன தீரவின் கூற்றுப்படி, 40 புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளதுடன், மீண்டும் தெரிவு செய்யப்பட்ட 20 எம்.பி.க்கள் அவர்களது முந்தைய...

சாள்ஸ் நிர்மலநாதன் குறித்து சுமந்திரன் விடுத்த கருத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்; இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை கோரிக்கை…

வன்னி மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களுக்கு பல்வேறு காரணங்களால்  ஆசன   நியமனம் வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறித்த கருத்தை அவர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என  இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு...

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு….

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(03.11.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (03.11.2024)...

மட்டக்களப்பு மாவட்ட சங்கு சின்ன தமிழரசு கட்சியின் கூட்டம்..!

மட்டக்களப்பு மாவட்ட சங்கு சின்ன தலைமை வேட்பாளரின் ஊரில் நடந்த தமிழரசு கட்சியின் கூட்டத்திற்கு அணி திரண்டு வந்த மக்கள். இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட சங்கு சின்ன தலைமை வேட்பாளரின் ஊரில் ( செட்டிபாளயத்தில் ) நடந்த தமிழரசு கட்சியின்...

கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ரம்புக்வெல்ல, அரசியலுக்கு வருவதற்கான எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்தும் போது, ​​தனது ஆதரவாளர்களுக்கு தனது முடிவை அறிவித்துள்ளார். அவர் பின்வாங்கிய போதிலும், தாம் அரசியலில்...

தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை.கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்-

தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை.கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் கட்சி மீது  மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என தமிழரசு கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்தார். தமிழரசு கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(13) மாலை மன்னாரில்...

தெற்கிலும் போட்டியிடவுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி!

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனது வடக்கு கிழக்கிற்கு அப்பால் தெற்கிலும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார் . கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் நேற்று (10-10-2024) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மற்றும்  மலையக பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்திலே...

வன்னியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல் செய்தது!!

வன்னிமாவட்டத்தில்பாராளுமன்றத் தேர்தலுக்கான  வேட்புமனுவினை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  இன்றையதினம் தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று மதியம் வேட்புமனுவினை தாக்கல் செய்தது. வன்னிமாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம்...

36 ஆண்டுகால பாராளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த லக்ஷ்மன் கிரியெல்ல!

எதிர்க்கட்சியின் மூத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (வயது 76) தனது 36 ஆண்டுகால பாராளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரியெல்ல, பல தசாப்தகால அரசியல் சேவையின் பின்னர் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது மகள் கண்டி மாவட்டத்தில் சமகி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img