Sunday, November 8, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

யாழில் ஒரு கோடி ரூபாய் பணம், கைப்பேசி, கடவுச்சீட்டு உள்ளிட்டவை கொள்ளை

யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்றுப் பெற்ற பணத்தை கொண்டுசென்ற நபரை இருவர் வழிமறித்து ஒரு கோடி ரூபாய் பணம், கையடக்கத் தொலைபேசி கடவுச்சீட்டு முதலியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்  தொடர்பில் காணி விற்பனை தரகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்...

டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் !

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான  மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை (03.10) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. மழை காலம் வருவதனால் டெங்கு நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார...

யாழ். நெல்லியடி புடவைக்கடைக்கு தீ வைப்பு…!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்று புதன்கிழமை (02.10)  இரவு , மூவர் அடங்கிய வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆடைகள் மீது பெற்றோலை ஊற்றி தீ...

பல்கலைக்கழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கான வெளியினை உறுதிப்படுத்தல் – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது நேற்றைய தினம்(3.10.2024)  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆரோக்கியமான விவாதங்களிற்கும், கருத்துப் பரிமாறல்களிற்குமான களமாக பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன. கருத்துச் சுதந்திரம் கல்விச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக சமூகத்தினை சேர்ந்தவர்கள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளவல்ல அறிவு முதிர்சியினை கொண்டிருப்பர். அண்மையில் 15 பல்கலைக்கழக ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிற்கு...

அகில இலங்கை சமாதான நீதிவானாக லயன் அ.பிரபாகரன் சத்தியப்பிரமாணம்….!

யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக  லயன் அ.பிரபாகரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் அலுவலரும், யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் சேவைத் திட்ட தலைவருமான இவர்  பல்வேறு சமூக நலத்திட்டங்களையும் பல  சேவைகளையும்  செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் இரண்டு மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான பெண்ணொருவர் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்...

சைகைமொழிப் பயிற்சிக்கான சான்றிதழ்வழங்கும் நிகழ்வு!

சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சைகைமொழிப் பயிற்சியை நிறைவு செய்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் விழிப்புணர்வு நாடகம் மற்றும்...

வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன்!

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த பி.எஸ்.எம். சார்ல்ஸ் தனது பதவியில் இருந்து கடந்த 23ஆம் திகதி இராஜினாமா செய்ததை தொடர்ந்தே மேற்படி வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில்,...

மாமன் மருமகனுக்கு இடையில் தகராறு; மருமகன் படுகாயம்!

மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாரிய இரும்பினால் தாக்கியதில் மருமகன் படுகாயம் அடைந்துள்ளார். இந் நிலையில் காயமடைந்த நபர் கிளேசி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தில் கல்மடோ இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும்...

யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிக்கொண்டாட்டம்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img