Thursday, April 23, 2026
No menu items!

வடமராட்சி

வல்வையில் விபத்து ஒருவர் உயிரிழப்பு..!

இன்று காலை வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே மீண்டும் விபத்து. ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் BBD 0315 எனும் இலக்கம் கொண்ட வெகோ மோட்டார் சைக்கிளில்...

அவதியில் அம்பன் பிரதேச  நோயாளர்கள் !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை  தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு வைத்தியர்கள் பகலில் கடமையில் உள்ள போதிலும் இரவு வேளைகளில் வைத்தியர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை. இரவு வேளைகளில் வைத்தியசாலைக்கு...

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென கட்சி ஒன்றின் தலைவரால் உத்தரவு!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை மீண்டும் தலை தூக்கியதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத சுருக்குவலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொழில் நடவடிக்கைகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நடவடிக்கையால் வடமராட்சி கிழக்கு கடலில் மீன்வளம் அதிகரித்து மீன்களின் விலையும் பாரியளவு உயர்ந்து...

தாளையடி பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க பாடசாலையில்  மாணவர்களால் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி இன்று(08.08) காலை முன்னெடுக்கப்பட்டது. பேரணியை தொடர்ந்து பாடசாலை பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள பொலித்தீன் மற்றும் உக்காத கழிவு பொருட்கள் மாணவர்களால் அகற்றப்பட்டது. குறித்த பேரணியில் வடமராட்சி கிழக்கு பிரதேச பொது சுகாதார பரிசோதகர்...

சட்டவிரோத தொழிலாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இருந்து சட்டவிரோத தொழிலாளர் ஒருவர் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி பெருமளவான மீன்களை பிடிக்கும் காணொளியை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தொடர்ச்சியாக சட்டவிரோத சுருக்குவலை தொழில் கடற்படையின் ஆதரவுடன் இடம்பெறுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளாந்தம் ஐம்பதுக்கும் அதிகமான...

சந்நிதி முருகனுக்கு சற்றுமுன் கொடியேற்றம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு  சன்னதி முருகன் ஆலயத்தின் இவ்வாண்டிற்க்கான  பெருந்திருவிழாவின்  கொடியேற்ற திருவிழா  இன்று சிறப்பாக இடம் பெற்றது. யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று பிற்பகல் 6:30  மணியளவில் ஆரம்பமான விசேட பூஜைகளுடன் இரவு 7:30 மணியளவில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

யாழ்ப்பாணமாவட்டடம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு பெரும் பாதுகாப்டன் 02/08/2024 விஜயம் செய்த ஜானதிபதி ரணில் விக்கிரமசிங்க. விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை  மாமுனை பகுதி மக்கள் சிறப்புடன் வரவேற்றனர். ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர். ஜனாதிபதி மக்களுடனும் கலந்துரையாடினார். தாளையடியில் அமையப்பெற்ற கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தினையும் திறந்து வைத்துள்ளார்.  

போதைப்பொருள் தடுப்பு பிரிவால் சிறுவன் உட்பட இருவருக்கு  அச்சுறுத்தல், மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அச்சுறுத்தியுள்ளதாக நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 20/07/2024 சனிக்கிழமை நள்ளிரவுவேளை தமது வீட்டிற்க்குள் நுழைந்த தம்மை போதை தடுப்பு பொலிசார் என அறிமுகம் செய்து தந்தை மற்றும்...

சுண்டிக்குளத்தில் வாடி அமைத்து இடம்பெறும் சட்டவிரோத தொழில்!

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் சட்டவிரோத தொழிலாளர்கள் வாடி அமைத்து சட்டவிரோத தொழில்களான சுருக்குவலை,அட்டை,தொழில்களை செய்து வருவதாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் சமாசம் கடற்தொழில் அமைச்சரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசதலைவர் த.தங்கரூபன் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று முந்தினம் (20.07.2024) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாராந்த நிகழ்வு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்று காலை  முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினரும், ஓய்வு பெற்ற அதிபருமான சிவநாதன்  தலைமையில் இடம் பெற்றது. இதில் “தமிழே முருகன் “ எனும் தலைப்பில்  ஆன்மீக சொற்பொழிவை, தொல்பொருள் திணைக்கள...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img