7840EC-USA-TRUMP_TARIFFS_IMPLEMENT_CAPTIONED__O_

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது 25 சதவீதமும், சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பென்டனைல் என்ற மருந்து பொருள் வலி நிவாரணியாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதனால், கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இந்த பென்டனைலை விநியோகித்ததற்காக கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு வரிகளை விதிப்பது என புதிதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் முடிவு செய்தது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here