Monday, April 20, 2026
No menu items!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

73 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…!

1951ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 73வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. மத்தியவாத நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஸ்ரீ.ல.சு.க நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்களின் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹாஜன எக்சத் பெரமுனவின் ஆதரவுடன் பலமிக்க கட்சியானது. 1956...

தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன !

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தற்போது கூறுகின்ற சில கூற்றுக்கள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான பிரச்சினை நீதிமன்றில் ஆராயப்பட்டு வருவதாகவும், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்னும்...

வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட விஜயதாச ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நீதியமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ இன்று காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நாவலில் உள்ள அவரது இல்லத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது. மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீரவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின்...

யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை: சந்திரிக்கா பண்டாரநாயக்க கருத்து..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள்...

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரொஷான் ரணசிங்க…

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இனி இடமில்லை எனவும் புதிய வேலைத்திட்டத்துடன் இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்றும்,...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எழுந்துள்ள சிக்கல் நிலை…!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல உட்பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் இந்த பிரச்சினைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் வரை சென்றுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரிலோ அல்லது சின்னத்திலோ இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எந்தக் கட்சிக்கும்...

வேட்பாளரை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி, எதிர்வரும் 31ஆம் திகதி, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது ஒரேயொரு சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை...

சுதந்திரக் கட்சி சார்பில் களமிறங்கும் ஒருவர்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16.07) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த...

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்..

முன்னாள் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான லயனல் பிரேமசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். காலி மகிந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான அவர், தொழில் ரீதியாக சட்டத்தரணியாவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்த அவர், காலி மேயராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி...

விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிப்பு..!

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், உறுப்பினராகவும் செயற்படுவதற்கு  விதிக்கப்பட்டிருந்த  தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு  கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். இதன் போது  வழக்கு தொடர்பில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க காலஅவகாசம் வழங்குமாறு...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img