Saturday, November 21, 2026
No menu items!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பிய அலி சப்ரி!

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “என்னுடைய இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினரான அலி சப்ரி, தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். அவர் முன்னாள்...

பொதுத் தேர்தலில் இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு; நாமல் ராஜபக்ஷ!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது இளம் வேட்பாளர்களுக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 50 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காலியாக...

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் கட்சியில் இணைய நாமல் அழைப்பு…!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் அக்கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைத்து, திறமையான...

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் மொட்டுக் கட்சி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றை அடுத்து ஊடகங்களுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் நிலைப்பாடு வாக்குகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். யாருக்கு ஆதரவளிப்பது...

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இந்நிலையில்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (24) நெலும் மாவத்தையில் நடைபெற்றுள்ளது. அதில், ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஊழல்...

ரணில் மற்றும் நாமலின் முக்கிய ஆதரவாளர் நாட்டில் இருந்து வெளியேறினர்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளிநாடு செல்லவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலம் முழுவதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக...

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நிறுத்தம்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நிறுத்தப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை மீறி மற்றுமொரு வேட்பாளருக்கு...

நாளை ஜனாதிபதி தேர்தல் இன்று துபாய்க்கு சென்ற பசில் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை (09/20) காலை பயணமாகியுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார். பசில் ராஜபக்ஷ இந்த விமான சேவைக்காக 206 அமெரிக்க...

நாட்டில் ஜென்டில்மேன் அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தனது குடும்பத்தை வலுவாக பாதுகாத்துள்ளார். தனது மகன் நாமலுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தினர் மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்துள்ளார். "அவர்களும் அதையே செய்கிறார்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் ராஜபக்சேக்கள் திருடர்கள் என்று...

இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே; ராகுல தேரர்!

நாமல் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவை வாபஸ் பெற்று சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சியின் ஆதரவை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடம்பஹல ராகுல தேரர் வலியுறுத்தியுள்ளார். நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி விக்ரமசிங்கவின் வேட்புமனுவை ஆதரிக்குமாறு பௌத்த மாநாட்டின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபயராமய ஆலயத்தின்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img