Sunday, June 28, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளார் நியமனம்..!

கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளி கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளாராக கே.குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்றையதினம் (11.12.2024) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர குணநாதனுக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்துள்ளார். முன்னாள்...

வரவு செலவு திட்டம் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்..!

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஓர் அங்கமாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (11.12.2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கிராமிய...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றின் உத்தரவு..!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11.12.2024) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று...

 மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்றைய தினம் புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்குச் செல்வதனை மீனவர்கள் தவிர்க்க...

நிரோஷன் திக்வெல்லவின் தடைக் காலம் குறைப்பு..!

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11.12.2024) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார். முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் (SLADA)...

ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினால் மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்..!

இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தில் மீதியை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கினால், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாதங்களுக்கு மின்சார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க முடியாது என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டபடி 162 பில்லியன் ரூபா...

யாழை அச்சுறுத்தும் காய்ச்சல் – திணறும் சுகாதார பிரிவு..!

யாழ். மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் வகை இன்னும் இனங்காணப்படவில்லை எனவும் அல்லது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பரவும்...

பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..!

வீதித் தடுப்பில் நிறுத்தாமல் உத்தரவை மீறி சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த பாரவூர்தி அம்பலாந்தோட்டையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நோக்கிச் சென்ற இந்த பாரவூர்தி மீது சந்தேகத்தின் பேரில், அம்பலாந்தோட்டை மணிக்கூண்டுக்கு அருகில் உள்ள வீதித் தடுப்பில் நிறுத்துமாறு பொலிஸார்  சமிக்ஞை செய்துள்ளனர். ஆனால்,...

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்..!

தென்கொரியாவில் அவசரநிலை இராணுவச் சட்டத்துக்கு பரிந்துரைத்ததற்காக கைதான அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யாங் ஹயூன் தனது  உயிரை மாய்க்க முயன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்ப்பதற்கு முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவை உலுக்கிய மார்ஷல் சட்டத்தின் பின்னர்...

வடிவேல் சுரேஷை வெளியேற்றுமாறு அறிவிப்பு..!

ஹாலி-எல உணுகொல்லவில் உள்ள தோட்ட முகாமையாளர் விடுதியை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், ஆக்கிரமித்துள்ளதாகவும் அவரை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (10.12.2024) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img