ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இதுவரையில் தீர்மானம் எடுக்காத நிலையில், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த விடயம் தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here