1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பண்டாரவளை, ஹப்புத்தளை, வெலிமடை, எல்ல மற்றும் ஏனைய பல பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக இந்த போதைப்பொருள்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபரிடம் 440 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும், 1020 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2