வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் உள்ளிட்ட 3 பேர் இன்று அதிகாலை பொத்துவில் அறுகம்பையில் இருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்துள்ளனர்.
இதன் போது காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாளங்குடா பகுதியில் வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








