2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டுக்காக 338 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா-இஸ்ரேல் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியதாக கூறி, தனக்கு அமைதிக்கான நோபல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் இவரை பரிந்துரைத்துள்ளன.

ஆனால், பரிந்துரைகள் ஜனவரி 31க்கு பின்னர் வழங்கப்பட்டதால், 2025 நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியற்றவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. நிபுணர்கள், ட்ரம்ப்க்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இறுதிப் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்காதது மற்றும் ஐந்து பேர் கொண்ட நோபல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரது பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here