இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நடைமுறையிலுள்ள தகவல் மற்றும் தொடர்பாடல் முகவராண்மை நிறுவனத்தினை (ICTA) இரத்துச் செய்து டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் டிஜிட்டல் அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் , இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தற்போது காணப்படுகின்ற டிஜிட்டல் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துகின்ற அனுபவங்கள் பற்றி ஆராயப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, தேசிய டிஜிட்டல் மூலோபாயங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்காக நிரந்தமாகவும் சிறப்பாகவும் வரையறைக்கப்பட்ட நிறுவன ரீதியான கட்டமைப்பொன்று இருக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த விடயங்களைக் எதிர்காலத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள டிஜிட்டல் நிலையுருமாற்றக் கருத்திட்டங்களை தடைகளின்றி அமுல்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான அதிகாரங்களுடன் சுயாதீன நிறுவனமாக GOV TECH (PVT) LIMITED
பெயரிலான அரசுக்குச் சொந்தமான கம்பனியொன்றை நிறுவுவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.








