2025 மே மாதத்தில் வெளியான 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சில முக்கிய கண்டறிதல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2020 முதல் 2022 வரை கல்வி அமைச்சு கல்வி சீர்திருத்தங்களுக்காக 5,219 மில்லியன் ரூபாய், தேசியக் கல்வி நிறுவனம் 350 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
ஆனால், இந்தச் சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படவில்லை என்றும், 2015 மார்ச் 26 வரை சீர்திருத்தங்களுக்கான தயாரிக்கப்படவில்லை என்றும், அறிக்கை எடுத்துக்காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








